குன்னூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 March 2024

குன்னூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்

 


குன்னூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்                                

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பும் திகழ் அறக்கட்டளை மற்றும் நீலகிரி மக்கள் நற்பணி மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி  V.P தெருவில் நடைபெற்றது திகழ் அறக்கட்டளை நிறுவனர் கோவர்தனன் ராமசாமி அவர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக மார்க்கெட் சங்க தலைவர் பரமேஸ்வரன் செயலாளர் ரஹீம் மற்றும் சமூக ஆர்வலர்களான ஜெபரத்தினம்  , ராமகிருஷ்ணன் , நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர்  சுரேஷ் ரமணா மற்றும் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர் இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் 32 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது 62 நபர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட சமூக  தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்  வினோத்குமார், நீலகிரி மக்கள் நற்பணி மையம்  விஜயகாந்த் பொது செயலாளர்  நீலகிரி மக்கள் நற்பணி மையம்  மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad