நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து டாக்டர் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டது இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து டாக்டர் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டது இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்பு...


 நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து டாக்டர் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டது இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்பு...

பந்தலூரை அடுத்துள்ள எருமாடு  பகுதியில் இயங்கி வரும்  டாக்டர் அப்துல்கலாம் அன்னை தெரேசா அறக்கட்ணளை அமைப்புகள் பல்வேறு நலப்பணித் திட்டங்களை செய்து வருகின்றனர் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் பாடம் கற்பித்தல் மற்றும் செய்தி தாள் வாசிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதே போன்று அப்துல் கலாம் அறக்கட்டளை பல்வேறு நல திட்ட சேவைகளை செய்து வருகின்றனர் .

 ஏழை எளிய குடும்பத்துக்கு நோயினால் வாடும் குடும்பத்தினருக்கு வாழ்க்கையில் முன்னேற  முடியாமல் கஷ்டப்படக்கூடிய குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் எருமாடு  அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாணவிகளின்  வாசிப்புத்திறன் மற்றும் கட்டுரை போட்டி பேச்சு போட்டி பாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தினர் . இந்த போட்டியில் மொபையிலின் பயன் பாடு.விவசாயத்தினால் அழிவு. புரட்சி பெண்கள்.மனித இன்றைய வாழ்வு.போன்றவற்றின் தலைப்பில் பேசி போட்டியில் மாணவர்கள் தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும்  பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி பாடல் திறன் போன்ற போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சான்று மட்டும் சீல்டுகள்  மெடல் போன்றவை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு  அன்னை தெரேசா அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் சூசைராஜ் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட பொறியாளர் அணி துனை அமைப்பாளர் விஜெயன்.சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீஜா.ஆசிரியர் ராமசந்திரன். நிர்மலா மற்றும்  பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டனர்  ..நிகழ்ச்சியின் இறுதியாக இலநகை ஆசிரியர்  நன்றி கூறினார்...

No comments:

Post a Comment

Post Top Ad