நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது அதில் கட்டிட தொழிலாளர்களான 6 பெண்கள் மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 February 2024

நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது அதில் கட்டிட தொழிலாளர்களான 6 பெண்கள் மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று 7.2.2024 அன்று லவ்டேல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பிரிட்ஜோ என்பவர் வீடுகட்டும் பணி செய்துவரும் இடத்தில் அந்த வீட்டின் பக்கவாட்டில் மண்ணை தோண்டும் போது அருகில் இருந்த பழைய கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது அதில் கட்டிட தொழிலாளர்களான 6 பெண்கள் மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர் 


தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் மண்ணுக்குள் புதைந்த உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்


இதனையடுத்து உடனடியாக லவ்டேல் காவல்நிலையத்தில்  Cr.no:8/24 u/s288,336,337304(ii)IPC பிரிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கட்டிடத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ காண்ட்ராக்டர் பிரகாஷ் சூப்பர்வைசர் ஜாகீர் அஹ்மத் மற்றும் மேஸ்திரி ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்


இந்த சம்பவம் ஊட்டியில் பெறும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் & நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad