நெலிகோலு சிறு குறு விவசாயிகள் சார்பாக தேயிலை வாரியத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக அறப் போராட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 27 February 2024

நெலிகோலு சிறு குறு விவசாயிகள் சார்பாக தேயிலை வாரியத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக அறப் போராட்டம் நடைபெற்றது.


நெலிகோலு சிறு குறு விவசாயிகள் சார்பாக தேயிலை வாரியத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக அறப் போராட்டம் நடைபெற்றது. 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு தேயிலை வாரியத்தின் செயல்பாடுகளுக்கு எதிரான கண்டன குரல்களை எழுப்பினர்.


தேயிலை வாரியம், சிறு குறு விவசாயிகளுக்கு எவ்வித பலனும் அளிக்காத நிலையில் அதிக அளவில் மானியத்தில் இப்படிப்பட்ட வாரியத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.


நீலகிரி மாவட்ட தேயிலை தனக்கென ஓர் தனித்தன்மை மிகுந்த திடம் மணம் கொண்டுள்ளதை மறைத்து நீலகிரி தேயிலையை ஒரு கூட்டுப் பொருளாக பயன்படுத்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது


சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையான ஒரு கிலோ தேயிலையின் உண்மை விலையான 25/- ரூபாயினை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.


மாவட்ட பசுந்தேயிலை விலை கண்காணிப்பு குழு கூட்டத்தை தொடர்ச்சியாக கூட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


தேயிலை வாரியம் அளிக்கும் மானியங்கள் சிறு குறு தேயிலை விவசாயிகள் சென்றடையும் வகையில் தேயிலை வாரியம், விவசாயிகள் பற்றிய தகவல்களை சேகரித்து வைக்காத  தேயிலை வாரியத்தை கடுமையாக கண்டித்தனர்.


தேயிலை வாரிய நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் இன்று நடந்த அறப்போராட்டம் இனிமேல் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad