கரியசோலை அரசு உயர் நிலை பள்ளியில் ஈர நில தினம் அனுசரிக்கபட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

கரியசோலை அரசு உயர் நிலை பள்ளியில் ஈர நில தினம் அனுசரிக்கபட்டது.

 


கரியசோலை அரசு உயர் நிலை பள்ளியில் ஈர நில தினம் அனுசரிக்கபட்டது. 

ஈர நில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் ஆல் த சில்ரன் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் மணிவாசகம் தலைமை தாங்கினார். ஆசிரியர் நிசாத்முன்னிலை வகித்தார் பள்ளி ஆசிரியர் மார்கிரெட் மேரி வரவேற்றார். 


கூடலூர். நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஈர நிலம் எனும் சதுப்பு நிலங்கள் நீர் பிடிப்பு பகுதியாக நீரை தேக்கி மக்களுக்கு வழங்கும் முக்கிய பணியை செய்கிறது. பூமியின் நுரையீரல் எனப்படும் சதுப்பு நிலங்கள் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.  நன்னீர் சதுப்பு நிலம் மற்றும் உவர்ப்பு சதுப்பு நிலங்கள் இருவகையாக உள்ளன.  சதுப்பு நிலத்தில் உள்ள அலையாத்தி காடுகள் சுனாமி போன்ற பேரலைகள் ஏற்படும் போது பேரழிவுகளை தடுக்கும் தன்மையை கொண்டது. சதுப்பு நிலங்கள் நீரை தேக்கி விவசாயம் மற்றும் குடிநீரை வழங்குகிறது. இதில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் மாசடைகிறது. மேலும் இரசாயன கழிவுகள் கலப்பது தேங்குவது மனிதர்களுக்கு மட்டுமின்றி சதுப்பு நிலங்கள் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


எனவே சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். என்றார்.


ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது சதுப்பு நிலங்களில் தற்போது மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றி வருகின்றனர். இதனால் கட்டிடங்கள் பாதிக்கும் தன்மையும், சதுப்பு நிலங்கள் அழியும் தன்மையும் உருவாகும். அவற்றை தவிர்க்க வேண்டும். சதுப்பு நிலம் பாதுகாப்பதால் மட்டுமே எதிர் கால நீர்வளம் பாதுகாக்க முடியும் என்றார்.


நிகழ்ச்சியில் அனைவரும் இயற்கை பாதுகாப்பு உறுதி மொழி எடுத்து கொள்ளபட்டது.


முடிவில் ஆசிரியை  மேகலா நன்றி கூறினார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad