பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ப்பு.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 February 2024

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ப்பு..

 


பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ப்பு..

சேரங்கோடு ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பள்ளியானது 2023  துவக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்தது . 2024 நடுநிலைப் பள்ளியாக செயல்பட தொட துவங்கியது . இங்கு  138 மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் சிறப்பு ஆசிரியர்கள் எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர் இந்த பள்ளியில் பள்ளி வளர்ச்சி குழு பள்ளி மேலாண்மை குழு போன்றவர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர் .இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி  மாணவர்கள் பயின்று வருகின்றனர் அது மட்டுமல்ல இந்த பள்ளிக்கு சென்று வர வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த பள்ளியில் கணினி வசதியுடன்  செயல்படுகிறது 



மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு காலை சிற்றுண்டி  சுத்தமான சுகாதாரமான குடிநீரையும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது .மாணவர்கள் படிப்பின் மீது பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாடுடன் பயின்று தருவதால் இவர்கள் பல்வேறு பிரிவில் சிறந்து விளங்குகின்றனர் .குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வட்டார அளவில்  தமிழ் பேச்சுப்போட்டி கவிதை. வில்லுப்பாட்டு .நாடகம் போன்றவற்றின் மிக சிறந்து விளங்ககுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சு போட்டி வில்லு பாட்டு போன்றவற்றில் முதல் இடம் பிடித்து பரிசினை பெற்றுள்ளனர்.

 


மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பாடல் திறன் கணினி பயிற்சி போன்றவை சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர் அது மட்டுமல்லாது மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன .இங்கு தேவை இருக்கக்கூடியது  நூலகம் மிக அவசியமாக உள்ளது அந்த நூலகம் இங்கு வந்தால் மாணவருடைய அறிவுத்திறன் இன்னும் மேம்படும் என்று தலைமை ஆசிரியர் ஆண்டு அறிக்கையில் வாசித்தார் மேலும் இங்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 15 பேர் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்தப் பகுதியில் பள்ளிக்கு இன்னும் பல்வேறு வசதிகள் இருந்தால் இன்னும் சுற்றுவட்டார இருக்க கூடிய அனைத்து மாணவர்களும் இங்கு வந்து பயில ஒரு ஏதுவாக அமையும் என  தெரிவித்தார்.இந்த ஆண்டு விழாவில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து குழந்தைகளின்  வண்ண மிக  நடனங்கள் நடை பெற்றது .



இந்த நிகழ்சிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்   ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.வந்தோர்களை ஆசிரியர் முத்தம்மாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாட்டை வெயில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பூபதி மற்றும் நாயக்கன் சோலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தீபா. டேன்டி அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் யசோதா .கரோலின் வெஸ்ட் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி ராசலிங்கம் .விஜய் சிங்கம் நீலமலை ராஜா .சுரேஷ் அய்யனார் சந்திரன். தேவா .மற்றும்  பள்ளியின் ஆசிரியர்கள் நதிரா.அசிதா.சித்ரா .நிரஞ்சலி திருச்செல்வி.ஆஹானா. தயாளன். தேவா..பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலான்மை குழு..தற்காப்பு கலை பயிற்சி யாளர் கனேஸ்வரன். மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கலந்துக் கொண்டனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad