நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாதாந்திர நகர மன்ற கூட்டமானது நெல்லியாள நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துக்கொண்டனர் தங்கள் கருத்துகளை கூறினர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 February 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாதாந்திர நகர மன்ற கூட்டமானது நெல்லியாள நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துக்கொண்டனர் தங்கள் கருத்துகளை கூறினர்.

 


நீலகிரி மாவட்டம் பந்தலூர்  மாதாந்திர நகர மன்ற கூட்டமானது நெல்லியாள நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துக்கொண்டனர் தங்கள் கருத்துகளை கூறினர்.

பந்தலூர் நெல்லியாள நகராட்சியின்  மாதாந்திர நகர மன்ற கூட்டம் நெல்லியாள நகராட்சி மன்ற தலைவி சிவகாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆனையாளர் குமரிகண்ணன்.துனை தலைவர் நாகராஜன்.மற்றும் பணி மேற்பார்வையாளர். சிவபாக்கியம். துப்புரவு மேற்பார்வையாளர்  வெங்கடேஸ்.மற்றும் கவுன்சிலர்கள் கலந்துக்கொண்டனர்.


மன்ற கூட்டம் ஆரம்பத்திலேயே அமைதியான முறையிலே நடைபெற்றது. . கூட்டத்தில் பணிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளது என கவுன்சிலர்கள் கேட்டதற்கு  நகர மன்ற ஆனையாளர் குமரிமன்னன் கூறுகையில் உங்கள் பகுதியில் பல்வேறு  பணிகள் செய்ய வேண்டும் என்றால் தொழில் மதிப்பீடு செய்மப்பட வேண்டும்  அதன் படிதான் பணிகள் வழங்கப்படும் என்றார்.


மேலும் குடிநீர் பைப்புகள். 36.பைப்புகளை நான் நேரில்  பார்வையிட்டுள்ளேன்.குடிநீர்  தேவைகளுக்கு என்ன செய்யனுமோ அதை விரைவாக செய்து தருகிறேன் என்றார். மேலும் கவுன்சிலர் சேகர் எழந்து ஐயா கீழ் நாடுகானி நெல்லி யாள எல்லை வரவேற்பு பகுதியில் உள்ள  பேருந்து நிலையம் மிக மோஞமாக உள்ளது இவைகளை சீர் படுத்த வேண்டும் என்றார்.நான் மன்ற கூட்டத்தில்ல்.14.முறை எடுத்து கூறினேன் அதற்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.


16.ஆம் வார்டு பகுதியில்  உள்ள குடிநீரீ கிணறுகள் மிக மோசமாக உள்ளது ஏப்ரல் மே மாதங்களில் குடி நீர் பிரச்சனைகள் வரக்கூடும் என்றார்.மேலும் தெரு விளக்கு எரிவதில்லை  இங்கு அலுவலக்த்தில் கேட்டால் உதிரி பாகம் இல்லை  அதனால் எங்களால் தெருவிளக்கு போட முடியாது என கூறி சென்று விடுகிறார்கள். மேலும் நான்காம் வார்டு கவுன்சிலர் தங்கள் பகுதியில் உள்ள கால்வாய் சரியாக தூர்வாரப்பட வில்லை என்றார் அதற்கு ஆனையாளர் கூறும்போது அதை உடனடியாக பார்வையிடுகிறேன் என்றார். 


கூட்டத்தில்  கவுன்சிலர் ஆலன் பேசுகையில் அத்திக்குன்னா  ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திற்கு தண்ணீர் இல்லை அது போல் அங்கன் வாடிக்கு தண்ணீர் இல்லை தனியார் எஸ்டேட்டிடம் சொல்லி அங்கிருந்து  குடி நீர் பெற்று தான் சமையல் செய்யப்படுகிறது என்றார்.மேலும் கழிவு நீர் கால்வாயை சீர் செய்ய சென்றால் அந்த பணி நடை பெரும் இடத்தில் மூன்று சூப்ரவைசர்கள் உள்ளனர்  இது எதற்கு அது போல்  ஒரு பணிகள் நடை பெரும் போது சம்மந்த பட்ட பணி நபர்கள் இல்லாமல் நக்ஷவேறு பணிகளில் உள்ளவர்களை கொண்டு பணி நடை பெறுகிறது அது எதற்காக அப்படி செயல் படுத்த வேண்டும் என கேள்வி எழப்பினார். 


மேலும் பத்தாம் வார்டு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்து நிறுத்த பகுதியில் தான் அரசு பேருந்து திரும்பி செல்கிறது அந்த இடத்தில் தான் முக்கிய அமைச்சர்கள் வரவேற்று பேசக்கூடிய இடம் .அந்த இடம் குண்டும் குழியுமாக உள்ளது அதை சீர் படுத்த வேண்டும் என்றார்.  மன்ற கூட்டம் தொடக்க முதல் பிரச்சனையோடு நடந்து பிரச்சனையில் முடியும்  இன்றைம தினம்  தொடக்க முதல் இறுதி வரையிலும் மன்ற கூட்டம் சலசலப்பின்றி சுமுகமாக முடிந்தது இதற்கு முன் என்பது குறிப்பிட தக்கது



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad