நீலகிரி மாவட்டம் உதகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மனிதநேயம் என்னும் விழா நடத்தப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 January 2024

நீலகிரி மாவட்டம் உதகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மனிதநேயம் என்னும் விழா நடத்தப்பட்டது


நீலகிரி மாவட்டம் உதகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மனிதநேயம் என்னும் விழா நடத்தப்பட்டது

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. அருணா ஐஏஎஸ் அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.


 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருடன், போக்குவரத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.  மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த நிலையில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மனிதநேயத்தை பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசி மாணவ மாணவிகளை ஊக்குவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளுக்கு இடையே கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மனிதநேயம், விவசாயத்தை குறித்து அரசு ஆதிதிராவிடர்  நல நடுநிலை பள்ளி தக்கர் பாபா நகர் மாணவ மாணவிகள் ஆட்சியர் அசரும் வன்னம் நடனமாடி முதல் பரிசினை வென்றனர். தக்கர் பாபா நகர் பள்ளி முதல் பரிசினை வென்றதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் தனது பொற்கைகளால், பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரேணுகா அவர்களின் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அனைத்து பள்ளி குழந்தைகளிடம் அன்பாக பேசி விடை பெற்றார் மாவட்ட ஆட்சியர்.


தக்கர் பாபா பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்  அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் தலைமை ஆசிரியருக்கும் இந்த போட்டியில் முதல் பரிசை வென்ற மாணவ மாணவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இத்தருவனத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மஞ்சூர் தாலுகா செய்தியாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad