பந்தலூர் அருகே சேரங்கோடு நம்பர் 1ம் பகுதியில் தொழில் முனைவு விழிப்புணர்வு மற்றும் கால்நடை வளர்போர்க்கு அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 February 2024

பந்தலூர் அருகே சேரங்கோடு நம்பர் 1ம் பகுதியில் தொழில் முனைவு விழிப்புணர்வு மற்றும் கால்நடை வளர்போர்க்கு அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது


 பந்தலூர் அருகே சேரங்கோடு நம்பர் 1ம் பகுதியில்  தொழில் முனைவு விழிப்புணர்வு மற்றும் கால்நடை வளர்போர்க்கு அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு ஊரக புத்தாக்க திட்டம், ஆல் தி சில்ரன் அறக்கட்டளை, சோலிடரிடட் அமைப்பு, ஏகம் பவுண்டேஷன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார்.


தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கணக்காளர் சுப்பிரமணி, ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது வருவாய்க்கு மீறிய செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் வருவாய் பெற கைத்தொழில்கள் உதவுகின்றது. தையல் தொழில், கைவினை தொழில்கள், கணினி சார்ந்த தொழில்கள், மொழி மேம்பாடு பேச்சாற்றல் பயிற்சி உள்ளிட்டவை சுயதொழில்கள் மேற்கொள்ள முயற்சி செய்யலாம், அரசு மூலம் தையல் கூட்டுறவு சங்கத்தில் இணைந்து பள்ளி சீருடைகள் தைக்க வாய்ப்பு பெறலாம். இணைய வழியில் தங்கள் தொழில்கள் விளம்பரபடுத்தி வருவாய் பெற்று மேம்பட முடியும் என்று கூறினார்.


சோலிடரிடட் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசும்போது மகளிர்கள் மேம்பாடு அடைய வேண்டும் என பல்வேறு கைத்தொழில்கள் எங்களது அமைப்பு சார்பில் கற்று தரப்படுகிறது. ஆர்வமுடன் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார். 


சோலிடாரிடட் நிறுவன விவசாய பயிற்சியாளர் ஆரோக்கியசாமி கால்நடை வளர்ப்பு முறைகள், கால்நடை தீவணமான அசோலா வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்தும், அசோலா பயிரிடும் முறைகள் குறித்தும், அறுவடை கால் நடைகளுக்கு அசோலா தீவனம் வழங்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தார்.


பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு அசோலா தீவன விதைகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மகளீர்கள், இளைஞர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad