நீலகிரி மாவட்டம் நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 January 2024

நீலகிரி மாவட்டம் நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது


 நீலகிரி மாவட்டம் நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுயம்புவாக உருவான  லிங்கத்தை நெடுகுளா ஊர்மக்கள் பரம்பரையாக கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்



மலை மேல் அமைந்துள்ள கோயிலில் வருடம் ஒருமுறை நெடுகுளா ஊரைச் சேர்ந்த ஆண்கள் கடும் விரதமிருந்து பூ மிதித்து ஐய்யணுக்கு நேர்த்திக்கடன்  செலுத்துவர் .



மலைக்கோயில் புனரமைப்பு  பணி நடந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று கடும் விரதமிருந்து பூசாரிகள் உட்பட 19 பேர் பூ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் அது சமயம் படுகர் சமுதாய பாரம்பரிய நடனம் மற்றும் காணிக்கை  நிகழ்வு வெகு விமரிசையாக நடை பெற்றது 



நெடுகுளா ஊர் மக்களும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஊர்மக்களும் நீலகிரி மாவட்டம் முழுவதிலுமுள்ள படுக சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர்



நாளை 23 ம் தேதி   இன்றளவிலும் ஜெடையசுவாமி ஐய்யனின் அருளால் தண்ணீர் பானையில் தானாக உருவாகும் கருப்பு நிற திருநீர் விழா(கப்பு இக்குவ ஹப்ப) சிறப்பாக நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை நெடுகுளா ஊர்மக்களும் இளைஞர்களும் சிறப்பாக செய்திருந்தனர் ஏராளமானவர்கள் குழந்தைகளுக்கு மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தினர் .



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமைச் செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:

Post a Comment

Post Top Ad