நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள கையுன்னிக் அம்பலவயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 125 வது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது...
பந்தலூரை அடுத்துள்ள கையுனி அம்பலவயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 125 வது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இவ்விழாவில் கடந்த கால நிகழ்வுகள் சந்ததியினருக்கு கல்வி போதித்து வெற்றிப்பாதை அமைத்து முன்னேற்ற வழிவகை செய்து வருகிறது. கூடலூர் ஒன்றியத்தின் மிக தொன்மையான பள்ளிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் எனவே 125 வது ஆண்டு நிறைவு பெற்ற மகிழ்வு தருணத்தில் இரண்டு நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் இப்பள்ளி படித்த பல மாணவர்கள் அறிவின் படித்துறைகளை கடந்து பல்வேறு உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வருவது இப்படிக்கு பெருமையை சேர்ப்பதாக உள்ளது மேலும் கிராம முன்னேற்ற பாதையில் சென்றுள்ளது எனவே நமது பள்ளியை 125 ஆவது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பான முறையோ கொண்டாடப்பட்டு வருகிறது இந்த பள்ளியில் இரண்டு நாட்களாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கட்டுரை போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நிகழ்த்தப்பட்டு பள்ளி மாண மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றது ..
இந்நிலையில் மலை மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர்களின் பல்வேறு பழங்காலத்து பொருட்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .இந்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பழங் காலத்துபொருட்களை காண பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்து கலைப் பொருட்களை கண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் பழங்குடியினர் உடைய ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் அயன் பாக்ஸ் வாட்ச் வேட்டையாடுவதற்கு தேவையான பொருட்கள் செம்பில் ஆன பானைகள் வோட்டையாடுவதற்கான கருவிகள் வயல் உழவதற்கான உபகரனங்கள். மீன் பிடி வலைகள் துனிகள் வைக்கக்கூடிய தகர பெட்டிகள் குடுவைகள் விளக்குகள .போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. அதனுடன் மாணவர்களுடைய கைவினைப் பொருட்கள் அறிவியல் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது இதனோடு பழங்காலத்தில் நாணயங்கள் முதல் இன்றைய காலத்து நாணயங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன அதனைத் தொடர்ந்து பலங்காலத்து மன்னர் கள் ஸ்டாம்புகள் பழைய ரூபாய் நோட்டுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டதால் இதனை காண பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வில் நுழைவுவாயிலை பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா திறந்து வைத்தார். தொல் பொருள் கண்காட்சியை ஸ்ரீதரன் திறந்து வைத்தார். அறிவியல் கண்காட்சியை நெலா க்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜிசாசன்னி ரிப்பன் வைத்து திறந்து வைத்தார் முன் வாசு அவர்கள் முன்னிலை வகித்தார். புகைப்பட கண்காட்சியை நெலக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு சுந்தரன் அவர்கள் திறந்து வைத்தார் பின்பு இதனை தொடர்ந்து பொதுக் கூட்டமும் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment