நீலகிரி மாவட்டம்.பந்தலூர். அடுத்துள்ள எருமாடு பகுதியில் இயங்கி வரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மிக விமர்சியாக நடை பெற்றது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2024

நீலகிரி மாவட்டம்.பந்தலூர். அடுத்துள்ள எருமாடு பகுதியில் இயங்கி வரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மிக விமர்சியாக நடை பெற்றது...

 


நீலகிரி மாவட்டம்.பந்தலூர். அடுத்துள்ள எருமாடு பகுதியில் இயங்கி வரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு  தொடக்க விழா மிக விமர்சியாக நடை பெற்றது...

எருமாடு பகுதியில் இயங்கி வரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழா  மற்றும் கலாமின் கல்வி கனவு புதிய திட்டமும்  நலத்திட்ட உதவிகளும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என நடை பெற்றது.



ஏ.பி.ஐஜெ அப்துல் கலாம் அறக்கட்டளையானது அப்பகுதியில்   நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான மருத்துவ செலவுகள் . மருத்துவ உபகரணங்கள் பள்ளி படிப்புக்கான செலவு. வாழ்க்கையில் கஷ்டப்படுவோர்க்கு  இது போன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறக்கட்டளை முன்வந்து தங்களால் இயன்ற நிதிகளை திரட்டி மக்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கை காப்பாற்றி தந்து வருகின்றன..


 இந்த அறக்கட்டளை பந்தலூர் பகுதியில் தன் பெயரை நிலை நிறுத்தி செயல்பட்டு வருகின்றன இப்பேற்பட்ட அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழா எருமை மாடு பஜாரில் வைத்து சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் நிகழ்ச்சியாக சேரம்பாடி அடுத்துள்ள கையுன்னி என்கின்ற பகுதியிலிருந்து எருமை மாடு பஜார் வரை 5 கிலோ மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நிதி வழங்கும் விழாவும் மேடை கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார் .சேரங்கோடு ஊராட்சி மன்ற துனை தலைவரும் ஏபிஜே அப்துல் கலாமின் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் மற்றும் அப்துல்ரகூப்  முன்னிலை வகித்தனர்.. நிதிநிலை அறிக்கையை பொருலாளர் எஸ்கின்ராஜ்  வாசித்தளித்தார் . சிறப்புரையாக தாளூர் நீலகிரி ஆர்ட்ஸ் அன் சையின்ஸ் காலேஜியின்  முனைவர் ராசிக் கசாலி அவர்களும்  .கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள் ..வாழ்த்துறையாக மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் அனிபா மாஸ்டர் மருத்துவர் மருத்துவர் மேல் பின் வியாபாரி சங்க தலைவர் அலியார் போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்..


 நிகழ்ச்சியில் கிட்னி அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்சத்து  எழபத்தி மூன்று ஆயிரத்து ஐம்பது ரூபாய் காண காசோலை ஸ்ரீஜித் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கஷ்டப்பட்டு வாழ்கின்ற குடும்பத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கும்  தலா ஒருவருக்கு இருபதாயிரம் வீதம்   மூன்று மாணவர்களுக்கு தங்களது மேல் படிப்புக்கான செலவுக்கு முன்கூட்டியே வைப்பு நிதியாக ரூபாய் 20000 காசோலை வழங்கப்பட்டது ..


இதனைத் தொடர்ந்து  கிட்னி கேன்சரால் பாதிக்கப்பட்ட பத்து நபர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது..கலாம் அறக்கட்டளையின் செயலாளர். அருண்குமார் நன்றி கூறினார்...

No comments:

Post a Comment

Post Top Ad