இந்த வருடம் ஜனவரி 1ம்தேதி2024 அன்று ஹெத்தையம்மன் திருவிழா ஜெகதளா ஊரில் கோலாகலமாக நடைபெற்றது புத்தாண்டு விடுமுறையில் பண்டிகை நடைபெற்றதினால் ஏராளமானவர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதிலிருந்து வந்து கலந்துகொண்டு படுக கலாச்சார பாரம்பரிய உடையணிந்து ஹெத்தையம்மனுக்கு கணிக்கை செலுத்தினர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இரவு 7 மணிக்கு வானவேடிக்கை நிகழ்த்தி காட்டப்பட்டது வினாயகர் கோயிலில் ஆரம்பித்த தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடல் பாடலுடன் கோலாகலமாக ஹெத்தையம்மன் கோயில் வரை வந்து வினாயகர் கோயில் சென்றது ஏராளமான பக்தர்கள் தேரிழுத்தனர் இறுதி நிகழ்வாக மக்கள் அனைவரும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெகதளா ஊர்மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment