கூடலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் நான்கு வயது சிறுமி காயம் தொடரும் சிறுத்தையின் அட்டகாசம்......
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி சேவியர் மட்டம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவரின் மகள் கீர்த்திகா (4) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுத்தை தாக்கியதில் கீர்த்திகா காயங்களுடன் மீட்கப்பட்டார்,
பின்பு பந்தலூர் அரசு மருத்துவ மனையில் குழந்தை கீர்த்திகாவை எடுத்துச் சென்று முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் கீர்த்திகாவின் முகம் கால் கை என பல பகுதிகளில் சிறுத்தையின் நகங்கள் பட்டு காயங்கள் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து குழந்தை கீர்த்திகாவுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக கூடலூர் தலைமை மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து சென்றனர் ஏற்கனவே கடந்த மாதம் 22ஆம் தேதி இதே பகுதியில் தேயிலை தோட்டத்தில் 3 பெண்களை சிறுத்தை தாக்கியதும் அதில் ஒரு பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் தொடரும் சிறுத்தையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர், தொடர்ந்து மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர் சிறுத்தையை பிடிக்காவிட்டால் கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொடரந்து இன்று கொளப்பள்ளி பஜார் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறும் பொழுது, இது போல பல போராட்டங்கள் நடத்தியும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை என்றும், தொடர்ந்து வன விலங்கு தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது... இதற்கு இன்று தீர்வு காணா விட்டால் கூடலூர் முழுதும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment