உதகை வட்டத்தில் நீலகிரி மாவட்ட கனரக வாகன ஓட்டுனர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஹிட் அண்ட் ரன் வழக்கில் ஓட்டுனர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஏழு லட்சம் அபராதம் விதிப்பதை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர் நீலகிரி மாவட்டத்திலுள்ள 350 லாரிகளில் இன்று சுமார் 50 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மீதமுள்ள லாரிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளன இவ்வேளை நிறுத்த போராட்டம் தொடர்பாக சுமார் 50 லாரி ஓட்டுநர்கள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment