நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவன் கால்பந்து போட்டியில் சாதனை கிராமத்து மாணவர்க்கு குவியும் பாராட்டு..
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வநாயகம் - வெண்ணிலா தம்பதியினர். இவர்களின் மகன் அஸ்வந்த் 17 வயதான இவர் எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் டூ வகுப்பு படித்து வருகிறார். எருமாடு பகுதி என்றாலே., பொதுவாக கால்பந்து வீரர்கள் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதில் அஸ்வந்த் 7 வயதான போது கால்பந்து விளையாட்டில் தனக்கு உள்ள ஆர்வத்தை, பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து இவரது தந்தை வீட்டிற்கு அருகே, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுள்ளியோடு என்ற இடத்தில், உள்ள 'காந்திஸ்மாரகா" என்ற கால்பந்து பயிற்சி குழுவிடம் பயிற்சி பெற., அஸ்வந்தை அனுப்பியுள்ளார்.
அங்கு பயிற்சி பெற்ற அஸ்வந்த் பள்ளி அளவிலும், தாலுகா அளவிலும், நீலகிரி மாவட்ட அளவில் பல்வேறு கால்பந்து போட்டிகளில் பங்கேற்று கால்பந்து போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளா அளவில் நடைபெறும் லீக் போட்டிகள் மற்றும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில், பங்கேற்று விளையாடி பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் நடந்த கால்பந்து போட்டியில், தமிழக அளவில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற நிலையில், கால்பந்து வீரர் அஸ்வந்த் இந்த குழுவின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு விளையாடி உள்ளார்.
இந்த போட்டியில் பரிசு பெறா விட்டாலும், இந்திய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், தமிழக அணியின் கேப்டனாக பங்கேற்று இவர் விளையாடி உள்ளது., பந்தலூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது., மட்டுமின்றி இந்தியாவிற்கான கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி வெற்றி கோப்பை பெற வேண்டும் என்பது கால்பந்து வீரர் அஸ்வந்த் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.
இவர்களின் முயற்சிக்கு தமிழக விளையாட்டு துறை உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது... இவரை போன்ற சாதனை படைக்க விரும்பும் மாணவர்க்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment