உதகை 21 வது வார்டு லோயர் பஜார் பகுதியில் அமைந்திருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா அருகில் வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பம் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த நபர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிய விடியல் குழுவினர் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்....
அதை அப்பகுதியில் வசிப்பவர்கள் விடியல் தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு லாரன்ஸ் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அப்போது அவர் உடனடி நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஒப்புதல் பெயரில் நீலகிரி விடியல் தன்னார்வ அமைப்பினர் மற்றும் child help line case worker திருமதி .பாமா பிரகாஷ் காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன் அனைவரும் இணைந்து குழந்தைகளை மீட்டு அவர்களின் சொந்த மாவட்டமான அவினாசிக்கு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதியினர் திரு லாரன்ஸ் அவர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment