பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 January 2024

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

 


பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு  தடுப்பு சங்கம்,   கே பி டி எல் பவுண்டேஷன், சேரம்பாடி சமத்துவ சேவை குழு, சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

சேரம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், சமத்துவ சேவை குழு தலைவார் அன்பழகன் நிர்வாகிகள் மணி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருபுகழ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பத்மினி ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.


நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவ குழுவினர் கண் நோய்களுக்கு பரிசோதனை செய்தனர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சைக்கு பெற்றனர்.


25 பேர் கண் புரைநோயினால் பாதிக்கபட்டது கண்டறிய பட்டது. அதில் 12 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு  உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்ய படுகிறது.


தொடர்ந்து நடைபெற்ற இரத்த தான முகாமில் கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வாங்கி மருத்துவ குழுவினர் சீலா குமார், வசந்த், நாராயண மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.   

முகாமில் 15 பேர் இரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு இரத்த கொடையளர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் சமத்துவ சேவை குழு நிர்வாகிகள் ஜோன், சின்னத்தம்பி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad