நீலகிரி மாவட்டம்.கூடலூர் ஓவேலி வனச்சரகம் ஓவேலி மேற்கு பிரிவு பாரம் காவல் பகுதியில் மூன்று நாட்களாக காட்டு மாடு ஒன்று உடல்சோர்வுடன் சுற்றித் திரிவதாக வனப்பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தவுடன் பணியாளர்கள் 24.01.2024ம் தேதி காலை மரப்பாலம் பகுதியில் காட்டு மாடு இருப்பதை கண்டு பிடித்துது கண்காணித்து வந்தனர் . கால்நடை மருத்துவரை அழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தபோது காலை பரன்சைட் காப்பி எஸ்டேட் பகுதியில் இறந்துகிடந்தது கண்டுபிடித்தப்பட்டது.
பின்னர் முதுமலை கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்யும் போது நாட்டுதுப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது தெரிய வந்தது. வழக்குபதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வரப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment