நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த எருமாடு மணல்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நடை பெற்றது இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறினர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 27 January 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த எருமாடு மணல்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நடை பெற்றது இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறினர்.

 


நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த எருமாடு மணல்வயல்  ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நடை பெற்றது இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறினர்.



 எருமாடு மணல்வயல் பகுதியில் சேரங்கோடு ஊராட்சியின்  கிராம சபை  75 வது குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் எருமை மாடு அருகே மணல் வயல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் தலைவர் டெல்லி எலியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது .



துணைத்தலைவர் சந்திரபோஸ் வரவேற்ற ஊராட்சி செயலாளர் சஜித் அறிக்கை வாசித்தார் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு 100 நாள் வேலை திட்டம் செயல்பாடுகள் கலைஞர் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் வாக்காளர் தினம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஜல்ஜீவன் திட்டம் மாநில வாழ்வாதார இயக்கங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.



மேலும்  தொடர்ந்து பொதுமக்கள் சாலை வசதி தெரு விளக்கு குடிநீர் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதம் நடைபெற்றது வேண்டி பகுதியில் தெரு விளக்குகள் நடைபாதை மயானத்திற்கு சாலை வசதி மின் ஊழியர்கள் முறையாக வீடுகளில் மின் அளவீடு செய்ய வேண்டும் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது.


 பொதுமக்கள் பதிலளித்து பேசிய துணைத்தலைவர் சந்திரபோஸ் அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



இது போல சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவி லில்லிஏலியாஸ் கூறுகையில் இருக்கக்கூடிய நிதிகளை வைத்து தான் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம் என்றும் இனி அரசிடம் போதுமான நிதி பெற்று இருக்கக்கூடிய பணிகளை வெகு விரைவில் முடிக்க விரைந்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.



இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சென்றதால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . கூட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்கே மேற்பார்வையாளர் வசந்த். சுகாதார ஆய்வாளர் கனவேந்திரன் .டேன்டீ கோட்ட மேலாளர் புஷ்பராணி.ச சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஊராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad