நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நெலாக்கோட்டை பஜாரில் பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை.
திடீரென சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை துரத்த ஆரம்பித்தது
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையிலேயே வாகனத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
வாகன ஓட்டிகளும் வந்த வழியாக ஓடினர். இதனால் நெலாக்கோட்டைபஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினர். அடிக்கடி ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment