நீலகிரி மாவட்டம் கூடலுாரில் 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று நடக்கவிருக்கும் 2024, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவுப்படி கூடலூர் வருவாய் துறையினர் மற்றும் ரோட்டரி கூடலூர் வேலி இணைந்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் பேரணியை கூடலூர் கோட்டாட்சியர் துவங்கி வைத்து பேரணி முக்கிய வீதி அபிவிருத்தி வழியாக இதில் ஒருங்கிணைந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாணர்கள் கையில் பதாகைகளுடன் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர் இறுதியில் பேரணி கூடலூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் நிறைவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதிரதுல்லா தலைமையில் கூடலூரில் இந்தப் பேரணியில் கூடலூர் நகர மன்ற தலைவி பரிமளா கூடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டரி கூடலூர் வேலி சங்க உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர் இதில் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment