நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அனையட்டி ஊரைச் சேர்ந்த கல்லாகவுடர் மகன் செந்தாமரைக்கண்ணன் அகஸ்தியா அகாடமியில் அகஸ்தியா மணி அவர்களின் ஆசி பெற்ற கால்பந்து வீரர் ஆவார் .
செந்தாமரைக்கண்ணன் ராதா தம்பதியினருக்கு சாய்பல்லவி , பூஜா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் சாய்பல்லவி தனது நடன அசைவுகள் பாவனைகள் மூலம் அனைவரையும் கவர்ந்து பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
அவரின் தங்கை பூஜா அவர்கள் பல ஷார்ட் பிலிம்களில் நடித்த நிலையில் ஒரு திரைப்படத்திலும் நடித்தார் அவருக்கும் நெடுகுளாவை சேர்ந்த ஐய்யன் குரூப் I B S பேக்டரி சிவக்குமார் , சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு இளித்துறை கா.ராமச்சந்திரன் அவர்களின் மகள் வசந்தி ஆகிய தம்பதியினரின் மகன் வினித் ஆகியோர் திருமண நிச்சயதார்த்தம் 21.1.2024 அன்று கோவையில் நடைபெற்றது உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment