எமரால்டு பகுதியில் தைப்பூசத் திருவிழா பறவை காவடி மற்றும் அழகு குத்தி 108-க்கும் மேற்பட்டோர் பால்குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ முருக பெருமானுக்கு அபிஷேகம்...
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அறுபடை வீடு கொண்ட முருக பெருமானுக்கு தைப்பூச திருவிழாவானது கடந்த 9 ஆண்டுகளாக வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது அதில் இந்த ஆண்டு பத்தாம் ஆண்டாக 4 பறவை காவடி இருபதுக்கும் மேற்பட்டோர் அலகு குத்தியும் 108 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும் எல்லகண்டி ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எமரால்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தனர் அங்கு மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை கரகாட்டம் தப்பாட்டம் என பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு இந்த தைப்பூசி விழாவை சிறப்பித்தனர்
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவை எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் ஓம் முருகா பக்தர் குழுவினர் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த ஓம் முருகா பக்தர் குழுவினர் மற்றும் கோயில் கமிட்டினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment