பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் சாமியார் மலையில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 January 2024

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் சாமியார் மலையில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.


பந்தலூரை  அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் சாமியார் மலையில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

கொளப்பள்ளி அடுத்துள்ள சாமியார் மலை என்று அழைக்கக்கூடிய பிரசித்திப் பெற்ற கோவில் கொளப்ள்ளியில் அமைந்துள்ளது  இந்த சாமியார் மலைப்பகுதியில் சிறப்பு அம்சங்கள் கொண்டது.

ஏனென்றால் இந்த கோவில் மிக மிக பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்த மலையில்  முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் தவமிருந்து ஜலா சமாதி அடைந்தார்.


 இந்த சாமியார் மறைந்த பிறகு அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று கோயிலை சுத்தம் செய்து முறையாக வழிபட்டு வந்தனர்  இந்தப் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தாண்டு தினத்தன்று உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியில் உள்ள மக்கள் இந்த கோவிளுக்கு சென்று தரிசித்து வந்தனர் .புத்தாண்டு தினத்தன்று அப்பகுள்ள மக்கள் இந்த சன்னதிக்கு வந்து சாமி குப்பிடுவதோடு  சபரிமலை மாலை அணிவித்து பஜனை பூஜைகள் நடத்தப்பட்டு இந்த பகுதியில் இந்த கோயிலில் தொன்றுதொட்டு வழிநடத்தி வந்தனர் .


இந்த கோயிலில் சுற்றிலும் இயற்கையின் அழகின்  நடுவே அமைந்துள்ள இந்த கோவிலின் அருகே பெரிய பாறையின் இடையே சிறு ஊற்று  ஒன்று உள்ளது இது மிகவும் அதிசியமானது  இந்த பாறையின் நடுவே வற்றாது நீர் ஊற்று உள்ளது  இந்த புனித நீரை எடுத்து அருந்துவதோடு தங்களுக்கு பிடித்த கெட்ட சகலங்கள்  பினிகள் நீங்குகிறது அனைத்தும் விலகிச் செல்லும் என்ற ஒரு ஐதீகத்தோடு இதனை வழிபட்டு வருகின்றனர்.. இந்த மலை ஒட்டி கீழே ராமர் குளம் என்று சொல்லக்கூடிய குளம் ஒன்று உள்ளது.   


அந்த காலத்தில் ராமர் அங்கு வந்து தண்ணீர் அருந்தி சென்றதாக   அவருடைய கால் தடம் உள்ளது  என்ற ஒரு ஐதீகத்தோட அந்த பகுதி மக்கள்  வழிபட்டு வருகின்றனர்.

இந்த தினத்தன்று சிறப்பு பூஜைகள் அங்கு நடத்தப்பட்டு அனைவருக்கும் தீர்த்தம்  அபிஷேகம் வழங்கப்படும். 

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று வழிபட வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும்  அங்குள்ள இயற்கை காடுகள் மலைகளை பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்..


கோவிலுக்கு வரக்கூடிய அனை வருகாகும் மதிய உணவுகள் வழங்கப்படுகின்றன  இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த கோயில் பெயர் பெற்று விளங்கி வருகின்றன.. இருந்த போதும் இந்த சாமியார் மலையை ஒரு சுற்றுலா தளமாக அரசு அறிவித்தால் இந்த பகுதி வளர்ச்சி பெறும் பொருளாதார மேம்படும் வியாபாரங்கள் நடைபெறும் என்று அப்பகுரு மக்கள் வேண்டுகோளாக உள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad