விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 January 2024

விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்.


 நீலகிரி மாவட்டம் சேரங்கோடு-1 கிராமம் - அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்தார்.


      


  நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15.01.2024 அன்று மாலை கூடலூர்-அய்யன்கொல்லி வழிதடத்தில் 20 பயணிகளுடன் பயணம் செய்த TN-43-N-0779 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாகமோதிய விபத்தில், மின்கம்பி அறுந்து விழுந்ததில்,  பேருந்து ஓட்டுநர் திரு.நாகராஜ் (வயது 49) த/பெ.சதாசிவம் மற்றும் பேருந்தில் பயணம் செய்த சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.பாலாஜி (வயது 51) த/பெ.பாலசந்திரன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்தார். மேலும் இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். திரு.நாகராஜ் மற்றும் திரு.பாலாஜி ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad