நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மழவன் சேரம்பாடி பகுதியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழப்பு....
தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடி வரும் நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து மாலை வேளையில் அய்யன் கொல்லி வரை இயக்கப்படும் பேருந்தை ஓட்டுநர் நாகராஜ் (49) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார் அப்பொழுது நம்பியார் குந்நூ.. என்ற பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கூடலூர் நோக்கி வரவே சாலையில் வழி விடுவதற்காக நாகராஜ் பேருந்தை இடது பக்கம் திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது அப்பொழுது எதிரி வரும் பேருந்துக்காக வழிவிடும் சமயத்தில் கூடலூரில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் மின்கசிவு ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுனர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணியான ஆட்டோ ஓட்டுனர் பாலாஜி (51) என்பவர் அதே இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது இருவரது உடல்கள் மீட்கப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பொங்கல் திருநாளன்று விபத்து நடந்துள்ளதால் கூடலூர் பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.v
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment