பந்தலூர் அடுத்து எருமாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து வயநாடன் செட்டி சொசைட்டி குடும்ப சங்கங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2024

பந்தலூர் அடுத்து எருமாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து வயநாடன் செட்டி சொசைட்டி குடும்ப சங்கங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது..

 


பந்தலூர் அடுத்து எருமாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து வயநாடன் செட்டி சொசைட்டி குடும்ப சங்கங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது..

எருமாடு வி.எஸ் மண்டபத்தில் வைத்துவயநாடன் செட்டி சொசைட்டி குடும்ப சங்கங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது.. இந்த வயநாடன் செட்டி சங்கமானது 2020-ல் பதிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சிறப்பாக நடை பெற்று வருகிறது.

இந்த சமுதாயத்தினர் பொங்கல் திரு நாள் அன்று செட்டி  சமுதாயத்தில் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் உறவுகளை கண்டு மகிழ்வதோடு அன்றைய தினம் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஆண் பெண்களுக்கு திருமணம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது அறிமுகம் செய்து கொள்வது நடை பெறும்.



இந்த சங்கத்தின் நோக்கம்  பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் அவர்களை எப்படி படிக்க வைக்க வேண்டும்  சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும் இந்த சமுதாய குடும்ப சங்க கூட்டத்தில் ஒன்று கலந்து பேசி ஆலோசனை செய்வார்கள்..

 


அன்றைய தினம் சமுதாய செட்டியாரின் நிகழ்ச்சி திருவிழா கோலம் பூண்டு விமர்சியாக நடைபெறும் .இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1500 க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வயதான அனைவரும் ஒன்று திரண்டு இருந்தனர்  .



இந்த நிகழ்ச்சிக்கு செட்டி சமுதாய சங்கத் தலைவர் வேனு தலைமை தாங்கினார் .சங்கத்தின் செயலாளர் வாசு வரவேற்புரை அளித்தார். டாக்டர் அனூப்  விளக்க உரையாற்றினார் .இந்த நிகழ்வில் மேடைப்பேச்சு தொடர்ந்து பெண்களின் ஆடல் பாடல் நடை பெற்றது... 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad