பந்தலூர் சமூக வலைத்தளங்களில் எம்பி யை குறித்து அவதூறாக பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் எரு மாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் ..
நீலகிரி எம்பியும் திமுக துணை பொது செயலாளர் குறித்து அவதூறாக செய்திகளை சமூக வலைதளங்களில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சிலர் பதிவிடுகின்றார்கள். இவ்வாறு பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி எருமாடு காவல் நிலையத்தில் பந்தலூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை திமுக மாவட்ட பிரதிநிதி சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆன சந்திரபோஸ் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜார்ஜ் மற்றும் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் இருதயராஜ் திமுகவினர் புகார் மனு அளித்தனர்..எங்களது எம்பியை எக்காரணத்துக் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டோம் அவர் பெயரை யார் களங்கப்படுத்தின நாலும் விட மாட்டோம் என்றும் மக்களுக்காக குறிப்பாக நீலகிரி மாவட்ட மக்களுக்காக உழைக்கும் எங்கள் ராசாவை ஒருபோதும் களங்கம் ஏற்பட விட மாட்டோம் என திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment