நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மேங்கோரஞ்சி பகுதிகளில் அடுத்தடுத்து சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து இதில சிறுமி உட்பட ஒருவர் மரணம் அடைந்த நிலையில் இருவருக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியதை ஒட்டி இனிவரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் வனவிலங்கு தாக்க நேரிடுவோருக்கு 10 லட்சம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்தி மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆராசா தெரிவித்தனர்.
இதனை அடுத்து கூடலூர் பந்தலூர் பகுதியில் உள்ள 421 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. சுமார் 11 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவி தனியார் மண்டபத்தில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் பொழுது நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் , முதன்மை வன பாதுகாவலர் ராஜேஷ்குமார் டோக்ரா , மாவட்ட வனத்துறை இயக்குனர் வெங்கடேஷ் ,மாவட்ட வன பாதுகாவலர் கொம்மு ஓம்காரம் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதிரதுல்லா மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து கூடலூர் பந்தலூர் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் பொதுநல அமைப்பினர் உடன் கலந்துரையாடல் நடைபெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கூறும் பொழுது சமீபத்தில் பந்தலூர் பகுதியில் வனவிலங்குகள் தாக்குதல் அதிகரித்து வந்த நிலையில் இப்பகுதிக்கு புதியதாக 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள எனவும் இதுவரை இப்பகுதியில் உள்ளவர்களை 90 நபர்களை பணியில் அமர்த்தப்பட்ட வந்த நிலையில் தற்சமயம் மீண்டும் 60 பேர் அதிகரித்து மொத்தம் 150 நபர்களை பணியில் அமர்த்தவும் இதற்கு சுமார் ஆறு கோடி ரூபாய் இந்த திட்டம் நடைபெறும் எனவும் இதனை கண்காணிக்க கண்ட்ரோல் ரூம் 24 மணி நேரமும் இந்த அரை செயல்படவும் எனவும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வனவிலங்கு தென்பட்டாலோ எந்தவித அசம்பாவிதம் அடைப்பட்டாலோ பகுதியில் உள்ளவர்களுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் காவல்துறை இருப்பார்கள் எனவும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment