தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் திரு ஏ.பி. ஹரிஹரன் அறிக்கை : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2023

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் திரு ஏ.பி. ஹரிஹரன் அறிக்கை :

 


தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் திரு ஏ.பி. ஹரிஹரன் அறிக்கை :


*திரு.விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்.!*


நன்மனிதர். திரு.விஜயகாந்த் அவர்களுக்கு

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இறுதி அஞ்சலி 


"கதாபாத்திரத்திற்கு ஏற்ப சினிமாவில் நடிக்க தெரிந்தவர், சொந்த வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் நடிக்கத் தெரியாத யதார்த்த மனிதனாகவே இருந்தவர்" என்றால் அது திரு.விஜயகாந்த் மட்டுமே.! 


சினிமாவிலோ வாழ்க்கையிலோ ஜெயிக்க நிறம் முக்கியமல்ல. வெள்ளை மனமும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் முக்கியம் என்பதற்கு வாழ்ந்த உதாரணம் திரு.விஜயராஜ் என்ற விஜயகாந்த் அவர்கள். 'கலியுக கர்ணன்', 'பசிப்பிணி போக்க வந்த பொன்மன வள்ளல்', 'கருப்புத் தங்கம்', 'சொக்கத்தங்கம்' என அவரை நேசிக்கும் அன்பர்கள் பலரும் பல பட்டங்களை சூட்டி அவரை அழைத்து மகிழ்கிறார்கள்.


சூட்டிங்கில் நடிகர்களுக்கே முதல் தர சாப்பாடு. இதர பணியாளர்களுக்கெல்லாம் 'போனால் போகிறது' என்கிற ரீதியில் 'ஏதோ ஒரு சாதம்' என இருந்த நிலைமையை மாற்றி, பிரதான கதாநாயகர்களுக்கு தரப்படும் உணவையே கடைநிலை ஊழியர் வரை, அனைத்து டெக்னீசியன்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை வகுத்துக் கொடுத்தவர்.


நேர்மைக்கும், ஊழல் இல்லாத வாழ்வுக்கும் அடையாளமாக இருந்தவர். தான் நடித்த சினிமாக்களின் மூலமாக தேசப்பற்றையும், அரசின் கடமைகளையும் வலியுறுத்திச் சொன்னவர். கடைசி வரையிலும் தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மாற்று மொழிப்படங்களில் நடிக்காத அளவிற்கு தமிழ்ப்பற்று கொண்டவர்.


"கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்பார்களே, அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? இவருக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும்". அவரால் வாழ்வு பெற்றோரே அதற்கு சான்று.


எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இப்படி வெகு ஜனங்களால் ஒரு பிரிவு துயரை தாங்க முடியாத நிலை ஒன்று வந்த தலைவர் என்றால் அது இவர் மட்டுமே!


இந்த கடுமையான துயர் நிறைந்த சூழலில் அவரின் மறைவிற்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும், இறுதி மரியாதையையும் செலுத்துகிறது.


அவரை இழந்து வாடும் வீட்டாருக்கும், உண்மையான குடும்பத்தினரான அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.


- சி.எம்.ஆதவன்,

மாநில முதன்மை செய்தி தொடர்பாளர்

No comments:

Post a Comment

Post Top Ad