முன்னாள் தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் பதிவு (கிபி1917 ஜனவரி 17)மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் சுருக்கமேஎம்ஜி இராமச்சந்திரன்
துவக்க காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார்.
தமிழ்த் திரைப்பட நடிகராக மக்களின் இதயங்களை வென்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.
1977 முதல் தான் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த முதல்வராக திகழ்ந்தார்.
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்த முறையை நடைமுறைபடுத்தினார்.
1981ல் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார்.
தமிழகத்தில் பல பல்கலைகழகங்களை உருவாக்கி
புதியகல்விமுறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
1988 ல் இந்திய அரசு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment