கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக் காடுகள் கொண்ட வனப்பகுதியாகும். இந்த சோலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சோலையில் உள்ள சதுப்பு நிலங்கள் தேக்கி வைக்கும் தண்ணீர் சுமார் 25 கிராமங்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக அறிவிக்கப்பட்டு இந்த சோலை பசுமைக் காடுகள், நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள் நிறைந்த பகுதியாகவும், அரிய வகை தாவரங்கள், செடிகள், மரங்கள் உள்ள பகுதியாகவும், அரிய பறவைகள் மற்றும் வன விலங்குகளின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது.தொகுதிமை மாத்துகுன்
லாங்வுட் சோலை பகுதியில் கட்டிடம். பொதுமக்கள் எதிர்ப்பு
அரிய வகை தாவரங்கள், செடிகள், மரங்கள் உள்ள பகுதியாகவும், அரிய பறவைகள் மற்றும் வன விலங்குகளின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது.
மேலும் இந்த பகுதியை சுற்றுச் சூழல் மண்டலமாக அறிவித்து, லாங்வுட் சோலையைப் பாதுகாக்கவும், அங்கு பல்லுயிர் சூழல் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாக தகவலைத் தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் திடலில் முற்போக்கு மக்கள் மேடை அரங்கின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பணிகளை உடனடியாக தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment