மீண்டும் துவங்கியது மலை ரயில் சேவை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய சின்னமான மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது....
குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. அப்போது ரயில் தண்டவாளத்தின் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து 8 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment