சேரம்பாடி பஜாரில் இரவு உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடியது இதனால் அப்பகுதி பரபரப்பு மக்கள் பீதி.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 December 2023

சேரம்பாடி பஜாரில் இரவு உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடியது இதனால் அப்பகுதி பரபரப்பு மக்கள் பீதி..

 


சேரம்பாடி பஜாரில் இரவு  உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடியது இதனால் அப்பகுதி பரபரப்பு மக்கள் பீதி..

பந்தலூர் கூடலூர் பகுதியில் அதிகளவு யானை நடமாட்டம் காணப்படுகிறது .இந்த யானைகள் இரவு கிராம பகுதிகளில் வந்து வீடுகளை உடைப்பது ரேசன் கடைகளை உடைப்பது மக்களை துன்புருந்துவது என நடந்த வண்ணமே உள்ளது. இப்படி  அட்டகாசம் செய்யும் யானைகளை  வனத்துறையினர் விட்டி விட்டாலும் மீண்டும் ஊருக்குள் வருகிறது .இதனை யானை கண்கானிப்பு குழு  ஊருக்கும் வராமல்  விரட்டி விடுகின்றனர்.



இன்னிலையில் பந்தலூரை அடுத்துள்ள  சேரம்பாடி பகுதியில் சம்சுதின் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார் .இவர் சொற்ப லாபத்தில் இயங்கிவந்த மளிகைக்கடையை இரவு உலா வந்த காட்டு யானை உடைந்தது பின்பு கடையில் உள்ள காய்கறி மளிகை பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது. காட்டுயானை உடைக்கும் சத்தத்தை கேட்டு அப்பகம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து யானையை விரட்டினர்.



இதனிடையே வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு  வனத்துறையினர்  யானையை விரட்டும் பனியில் ஈடுபட்டனர்..இதனிடையே பாதிக்கப்பட்ட சம்சுதின்  வியாபார சங்க தலைவர்களை நாடினர் நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார் பின்பு அப்பகுதி வியாபாரிகள் பொது மக்கள்  கடைகளை அடைத்து விட்டு பஞ்சாயத்து தலைவரிடம் சம்பவத்தை எடுத்து  கூறினர் பின்பு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் லில்லிஏலியாஸ் துனை தலைவர் சந்திரபோஸ் போன்றோர் வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுந்தியதால் இறுதியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து  சேரம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார். ஆய்வாளர் சுப்புரத்தினம் . பந்தலூர் வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி. சேரம்பாடி வனச்சரகர் அய்யனார்.சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் லில்லிஏலியாஸ்.துனை தலைவர் சந்திரபோஸ்.வருவாய் துறை  அருன் .சேரம்பாடி .வியாபாரசங்கங்கள் போன்றோர் பேச்சு வார்த்தை  நடத்தினர்.


பேச்சு வார்த்தையில் பதினைந்து நாட்களுக்குள்  சேதமாக்கிய கடையை சரி செய்து தரவேண்டு உரிய நஸ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லை என்றார் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என வியாபார சங்கத்தலைவர்      கூறினார். இடையில் வியாபாரிகள் கூறும் போது இது போன்ற சம்பவங்களில் தான் அலுவலர்களை பார்க்க முடியும் என கூறினார் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad