ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 December 2023

ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது


 ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது



கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சேர்ந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு தலைமை வகித்தார் 



மாணவர்களிடையே உணவு கலப்படம் குறித்த புத்தகத்தை நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் வெளியிட பள்ளி மக்கள் உறவு மன்ற பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றுக் கொண்டனர். 



கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தற்போதைய சூழலில் விளம்பரங்கள் மூலம் தேவையற்ற உணவுகளை மாணவர்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன குறிப்பாக ஊட்டச்சத்து பானங்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பும் நிறைந்த உணவுகளாகவே உள்ளது இவற்றை ஆரோக்கியமான   ஏற்படுத்துவதாக கருதி பயன்படுத்துவதால் இளம் வயதிலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளினால் பற்கள் சொத்தை, நினைவாற்றல் குறைவு மந்த தன்மை உள்ளிட்ட ஆபத்துகளும் உள்ளது ஐஸ்கிரீம் போன்றவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இதய பாதிப்புகள் அதிகரித்து உள்ளது மேலும் விரைவு உணவுகள் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.  இளம் வயதிலேயே விளம்பரங்களை நம்பி பொருட்கள் வாங்கி பயன்படுத்தும் முறைகளை மாற்றி கொள்ள வேண்டும். ரசாயனங்கள் உள்ள சோப்புகள் ஷாம்பு உள்ளிட்டவை தவிர்க்க வேண்டும் தரமான பொருட்களை தரமான உணவுகளை பெறுவதற்கு மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார்.



குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சுரேஷ் பேசும்போது மாணவர்கள் விழிப்போடு இருப்பதால் வருங்கால சமுதாயம் விழிப்புற்ற சமுதாயமாக மாற முடியும் எனவே கல்வியோடு நுகர்வோர் சார்ந்த தகவல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். பொருட்கள் வாங்கும் போது எடை அளவுகள், விலை தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற தகவல்கள் சரியானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் என்றார். பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.    



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad