நீலகிரி மாவட்டம் பந்நலூர் பியூச்சர் மஹாலில் வைத்து உதகை மண்டல சமூக சேவா சங்க சார்பில் தொழிற் பயிற்சி மூலம் பயிற்சி முடித்த ஆண்கள் பெண்கள் இருபாலர்க்கும் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பயனாளிகள் பயன் பெற்றனர்..
பந்தலூர் உதகையில் இயங்கிவரும் உதகமண்டலம் சமூக சேவா சங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சேவா சங்கம் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இந்த அமைப்பு செயல் படுகிறது . படித்து வேலை இல்லாமல் இருக்கும் ஆண் பெண்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு உதவி தொகை வழங்கி வருகிறது.
இதனிடையே சொந்த தொழில் செய்வதற்கு தங்களால் இயன்ற உதவிளையும் செய்து வருகிறது. இதனிடையே ஸ்கிரீன் பிரின்டிங்.வாகனம் ஒட்டுதல்.தையல் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர் .. இந்த பயிற்சிகளை முடித்து சான்றிதழ்களை பெற்று வெளியூர்களிலும் சொந்த ஊரிலும் தொழில் புரிந்து வருகின்றனர் .மேலும் இது போன்ற உதகை சமூக சேவா சங்கம் பல என்னற்ற தொழில் பயிற்சிகளை வழங்கி வருவதோடு ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர உறு துனையாக இருந்து வருகிறது..
இன்னிலையில் பந்தலூர் பகுதியில் பியூச்சர் மஹால் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உதக மண்டலம் சமூக சேவா சங்க சார்பில் பயிற்சி முடித்த ஆண்கள்.பெண்களுக்கு பயிற்சி முடித்ததர்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சி க்கு உதகமண்டல சமூக சேவா சங்க இயக்குனர் ஜான் ஜோசப்தன்னீஸ் தலைமை தாங்கினார் இந்த அமைப்பின் திய்ட அலுவலர் சுப்பிரபா .சிறப்பு விருந்தினர் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி . பந்தலூர் வியாபார சங்கம் செயலாளர் செல்வகுமார். பயிற்றுனர்கள் புஸ்பா ட்ரைவிங் பறிற்சி மைய உரிமையாளர் இன்பநாதன்.கூடலூர் ஸ்டார் ட்ரைவிங் பயிற்சி பள்ளி ரெஜீஸ் ஸ்கீரின் பிரின்டிங் பயிற்சியாளர் சந்தோஸ் .பந்தலூர் சங்க ஒருங்கினைப்பாளர் பாக்கியவதி விஜயசுந்தரி. கனகாம்பிகை. கீதா .ஜான்சி. மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி தான்றிதழ்.ஒட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..
நிகழ்ச்சியில் பாதர்ஜான்ஜோசப்தன்னீஸ் பேசுகையில் பெண்கள் எப்பொழதும் தன்நம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் சுயமா சம்பாதித்து சொந்தக்காளிய நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்
பிறரை நம்பி வாழ தேவையில்லை சொந்த தொழில் பயின்று இதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ பழகிக் கொள்ள வேண்டும் .இந்த பயிற்சியானது உங்களுக்கு சிரமப்பட்டு வழங்குவதோடு உங்கள் வாழ்வில் ஒளி வீச எங்களால் இயன்ற உதவிகளை உங்களுக்கு செய்து தருவோம் என்றனர் .சொந்தத் தொழில் இருந்தால் கவலையின்றி வாழ்வில் வாழலாம் அது போன்று சமூகத்தில் தன்னால் இயன்ற உதவியிலே மற்றவருக்கும் செய்து வாழ பழகிக் கொள்ளுங்கள் நமது அமைப்பு என்றென்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்று அவர் பேசினார் பின்பு பாதர் அவர்கள் தன் கடந்து வந்த பாதையில் அதில் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக் கூறினார்.
இது போல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி அவர்கள் கூறுகையில் பெண்கள் இந்நாட்டின் கண்கள் பெண்கள் என்றுமே சுய தொழில் கற்று அதில் வாழ்வின் மேம்பட வேண்டும் என்றும் ..
ஆளுகின்ற இந்த அரசு பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்து அந்தத் திட்டங்கள் பெண்களுக்கு சென்றடைய பல்வேறு உதவிகளை செய்து வருகிறது .குறிப்பாக மகளிர் உதவித்தொகை பெண்கள் மேல் படிப்புக்கான உதவித்தொகை கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத்தொகை கட்ணமின்றி பேருந்து பயனம் இது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை வகுத்து அதை பெண்களுக்கு சென்றடைய பல்வேறு முயற்சிகள் நடைமுறை படுத்தி வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு மேல் படிப்புக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது தளபதியாரின் ஆட்சியில் பெண்கள் கவலையின்றி வாழ பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தி வருகின்றது.இதனால் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய நல்ல பல திட்டங்களை செய்து வருவதின் காரணமாக நீங்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார். ஆண்கள் வாகனங்களை இயக்கி வந்த நிலையில் இங்குள்ள பெண்களும் சொந்த வாகனங்களை வாங்கி தொழில் புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் ..மேலும் நம் பகுதியில் உதகமண்டலம் சமூக சேவை சங்கம் பல்வேறு உதவிகளை பந்தலூர் கூடலூர் பகுதிக்கு செய்து வருகின்றது
No comments:
Post a Comment