பந்தலூர் அடுத்துள்ள அம்பலமூலா பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வெள்ளேரி மைதானத்தில், நீலகிரி- வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடந்தது.
நீலகிரி மற்றும் வயநாடு பகுதி பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 14 அணிகளை சேர்ந்த கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர்.
இறுதி போட்டியில் தேனம்பாடி- செருகுன்னு அணிகள் மோதின. 3-1 என்ற கோல் கணக்கில் தேனம்பாடி அணி வெற்றிப்பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக வினு, சிறந்த கோல் கீப்பராக அனீஷ் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் நலச்சங்க மேலாளர் ஜான் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ஷாஜி, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், அச்சுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment