நீலகிரி மாவட்டம். பந்தலூர் அடுத்துள்ள அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினால் வைக்கப்பட்ட கூண்டில் மாட்டிக்கொண்ட கரடி .கரடி பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 December 2023

நீலகிரி மாவட்டம். பந்தலூர் அடுத்துள்ள அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினால் வைக்கப்பட்ட கூண்டில் மாட்டிக்கொண்ட கரடி .கரடி பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி..

 


நீலகிரி மாவட்டம். பந்தலூர் அடுத்துள்ள அத்திமாநகர் பகுதியில்  வனத்துறையினால் வைக்கப்பட்ட கூண்டில் மாட்டிக்கொண்ட கரடி   .கரடி  பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி..



நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள உப்பட்டி அத்திமா நகர் பகுதி அதன் சுற்றுவட்டார பகுதியான அம்ருஸ் கடை ஏழு மன்னா போன்ற பகுதிகளில் கரடி  நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு நேரங்களில் வீட்டின் கதவு உடைப்பதும் மளிகை கடை உடைத்து உள்ளே இருக்கக்கூடிய ஆயில் உணவு பண்டங்களை சூரையாடி  நாசம் செய்தது .



 இதனை தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறையிடம்  புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக வனத்துறையினர் கரடி நடமாட்டம்  பகுதியில்  கூண்டை வைத்து அதற்கு இறையும் வைத்துவிட்டு வருவார்கள்.ஆனால் கரடிக்கு வைக்கும் உணவை தின்று விட்டு சென்று விடும்  இதன் நிகழ்வு தொடர்ந்த வண்ணமே இருந்தது ஆனால் கரடி சிக்குவதாக இல்லை.



 இப்படியே மூன்று மாத காலம் கடந்த நிலையில் நேற்றைய தினம் அத்தி மாநகர் பகுதியில் வனத்துறையினர்  கூண்டை வைத்து விட்டு சென்றனர் . கூண்டுக்குள் அருகே வந்து சென்ற கரடி வைக்கப்பட்டிருந்த ஆயுளை குடித்து விட்டுச் சென்றது .இதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் கரடிக்கு ஆயில் பழங்கள் போன்றவை வைக்கப்பட்டன இந்நிலையில் இன்று இரவு சரியாக 11 மணியளவில் கரடி கூண்டில் உள்ள இறையை சாப்பிட முற்பட்டபோது மாட்டிக்கொண்டது.



இன்னிலையில் மக்கள் கரடி கூண்டில் சிக்கியதை  பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தெரியப்படுத்தினர் இந்த நிலையில் வனத்துறையினர் வந்து பார்த்தபோது கூண்டுக்குள் கரடி மாட்டியிருப்பதைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்   அவர்களுக்கு தகவல் கொடுத்தனர் .அதன் பின் வந்து கரடியை பார்வையிட்டானர் .கரடி ஆக்ரோசத்துடன் காணப்பட்டதால் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர் பின்பு அதனை கூண்டில் சுற்றிலும் தார்ப்பாலின் போட்டு கட்டி வண்டி ஏற்றி முதுமலை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது .



அப்பொழுது  கூடி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் இதனை கண்ட பொதுமக்கள் பத்திரிகையாளரிடம் பேசும் போது இந்த கரடி 3 மாத காலமாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி  திரிவதோடு கடைகளை உடைப்பதும்  வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடுவதும் தொடர்ந்து வண்ணமே இருந்தது இதனால் நாங்கள் உயிரை கையில் பிடித்து வாழக்கூடிய சூழல் ஏற்பட்ட நிலையில் இன்றைய தினம்  வனத்துறையினர் கூண்டு  வைத்ததால்  கரடி மாட்டிக் கொண்டதால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad