பந்தலூர் அருகே மேங்கோரஞ் செம்மன்வயல் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 12 December 2023

பந்தலூர் அருகே மேங்கோரஞ் செம்மன்வயல் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

 


பந்தலூர் அருகே மேங்கோரஞ் செம்மன்வயல் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.



தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, மேங்கோரஞ் எஸ்டேட் மருத்துவமனை, மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மேங்கோரஞ் எஸ்டேட் மருத்துவமனை மருந்தாளுனர் ரமேஷ் தலைமை தாங்கினார். 



ரிச்மௌன்ட் மருந்தாளுநர் இளவரசன், நுகர்வோர் மைய துணை தலைவர் ராஜா, காசநோய் பிரிவு உதவியாளர் ரூபி, இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 



பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசுகையில் காசநோய் என்பது காற்றில் பரவும் தொற்று நோய், டிரிபோ குலோசிஸ் எனும் கிருமி நுரையீரலில் சேர்ந்து காசநோய் பாதிப்பு ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களிடையே அதிகமாக பரவும் சூழல் உள்ளதால் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை எஸ்ரே மூலம் சளிகட்டு உள்ளதை கண்டறிந்து சளி மாதிரி எடுத்து நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்து கண்டறியபடும். இதன்மூலம் காசநோய் கண்டறிந்தால் அரசு மூலம் இலவசமாக தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

 


கூடலூர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைக்க காசநோய் பிரிவினர் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை சளி மாதிரி சேகரிப்பு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad