நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள ஏலமன்னா பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் ஐந்தாவது நாளாக சிறுத்தை பிடிக்க கூண்டுகள் வைத்து தேடும்படியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள ஏலமன்னா பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் ஐந்தாவது நாளாக சிறுத்தை பிடிக்க கூண்டுகள் வைத்து தேடும்படியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 


நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள  ஏலமன்னா பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் ஐந்தாவது நாளாக சிறுத்தை பிடிக்க கூண்டுகள் வைத்து தேடும்படியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



பந்தலூரை அடுத்துள்ள ஏலமன்னா பகுதியில்  தொடர்ந்து மூன்று பேரை தாக்கிய சிறுத்தை குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த வேளையில் பல்வேறு பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கா மிகுந்த பரபரப்புடன் பணியாற்றி வந்தனர்.தொடர்ந்து சிறுத்தையோ வனத்துறைக்கு ஒரு சவாலாக அமைந்து வருகிறது இந்த சிறுத்தை பிடிப்பதற்கு ஏலமன்னா சுற்றுவட்டார பகுதியில் கூண்டுகளை வைப்பதோடு கூண்டுக்குள் கோழி ஆடுகளை பொறிவைத்தும் இதுவரை சிறுத்தை சிக்க வில்லை .



இன்னிலையில் சிறுத்தையானது சேரங்கோடு தேயிலைத் தோட்டம் சரகம் ஒன்று என்கின்ற பகுதியில் சிறுத்தை சுற்றி திரிவதாக அப்பகுதியில் பணிக்கு செல்பவர்கள் பார்த்து வனத்துறையிடம் தகவல் கொடுத்தனர் .



இந்நிலையில் வனத்துறையினர் சேரங்கோடு தேயிலைத் தோட்டம் சரகம் ஒன்னில் இருக்க பகுதியில் தேயிலைத் தோட்டத்தின்  இடையே இன்று மாலை சிறுத்தைக்கு கூண்டுகள் வைப்பதோடு தேயிலை தோட்டங்களில் கேமராவை பொருத்தப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை எங்கு செல்கின்றது என்பதனை கேமரா மூலம்  கண்காணிப்பதோடு சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டும் வைக்கப்பட்டது.



 இச்சூழலில் இப் பகுதி உள்ள மக்கள் கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படதோடு மாலை நேரம் பணிகள் முடிந்து விட்டு  வீட்டுக்கு திரும்பக்கூடிய தேயிலைத்தோட்ட தொழிலாளர்களிடம்  வனச்சரகர் பிலிப் கூறிய போது நீங்கள் பணிக்கு செல்லும் பொழுது ஒன்றாக சென்று பணி முடிந்து ஒன்றாக வீடு திரும்ப வேண்டும் என்றும் தேவை இல்லாமல் சுற்றி தெரிய வேண்டாம் என்றும் வீடுகளில் வளர்க்கும்  பிரானிகளை வெளியே விட வேண்டாம் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர  வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ‌..



No comments:

Post a Comment

Post Top Ad