பந்தலூரை அடுத்துள்ள பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி கணித ஆசிரியர்க்கு கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது தமிழக அரசிற்கு அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி நன்றி தெரிவித்தனர்...
பந்தலூரை அடுத்துள்ள பாட்டவயல் அரசு மேல்நிலைப்பள்ளி 1962.ஆண்டு துவங்கப்பட்டது இதில். தற்போது 256.பேர் பயின்று வருகின்றனர். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது .
இன்னிலையில் இந்த பள்ளியில் கணித பிரிவு பாட ஆசிரியராக ஷீபா பணியாற்றி வருகிறார. இவர் கடந்த டிசம்பர் 10.ஆம் தேதி நாமக்கல் இஞ்சினியர் கல்லூரியில் வைத்து கல்விதுறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமோழி அவர்கள் கையால் கனவுஆசிரியர் விருது பெற்றார் ..இவர் பாடப்பொருள் சார் அறிவு. வகுப்பறை கற்பித்தலில் புதுமையான அணுகுமுறைகள் .நவீன தகவல் தொடர்பு தொழில் நுட்ப பத்தினை கற்பித்தலுக்கும் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை பாராட்டி ஆசிரியர் பணியினை சிறப்பிக்க வகையில் டி எஸ் ஷீபா கணித பிரிவு ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது கிடைக்கப்பெற்றது.
இந்த தேர்வானது மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது தமிழகத்தில் 856.பேர் பங்கு பெற்றனர் இதில்380.பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர் அதில் ஒருவர் தான் இந்த ஷீபா ஆசிரியர் ஆவார் ..இவர் பெற்ற இந்த விருதுக்கு இன்றைய தினம் பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் முன்னால் தலைமையாசிரியர் பத்மநாதன். கவுன்சிலர் அஸ்ரப். பெற்றோர் கழக ஆசிரியர் ஸ்ரீ ஜேஸ் ஆசிரியர்கள் சகுந்தலா.ரஜினி பாஸ்கர். மாலதி.கோவிந்தராஜன். சுகன்யாரமா. ஜெயலட்சுமி. மரியம்.மற்றும் பள்ளி வளர்ச்சி குழ. பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவியர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொது மக்கள் பெற்றோர்கள் .மாணவ மாணவியர் நினைவு பரிசு சால்வை அணிவித்து கௌரவித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment