விறகுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

விறகுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை


கூடலூர் வன கோட்டம், பந்தலூர் சரகம், பந்தலூர் பிரிவு, தேவாலா காவல் பகுதி நாடுகாணி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, வயது 50 என்பவர் நேற்று (02.12.2023) விறகுகள் சேகரிக்க  சென்றுள்ளார்   தேவாலா bit I என்ற பிரிவு 53 நிலம் காட்டிற்குள் சென்று இருக்கிறார். விறகுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவருடைய உறவினர்கள் இன்று (3.12.23) காலை 7.00 மணியளவில் வனச்சரகர் அவர்களிடம் தெரிவித்தனர்  உடனடியாக வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளே சென்று தேடி பார்த்த பொழுது தேவாலா bit I  வன எல்லைப் பகுதியில் இருந்து உள்ளே சுமார் 700 மீட்டர் தொலைவில் ராமமூர்த்தி உடல் கிடந்ததை பார்க்கப்பட்டது.

 சுற்றி பார்த்ததில் அங்கு யானையின் கால் தடயங்கள் இருந்தது மேலும் அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் நான்கு யானைகளும் நின்றிருந்ததையும் பார்க்க முடிந்தது உடனடியாக அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு வனச்சரக வாகனத்தில் அனுப்பப்பட்டது அந்த தேவாலா bit I பகுதியில் ஏற்கனவே நேற்று ஒரு யானை கூட்டம் இருந்தது அவை காட்டை விட்டு வெளியே வராமல் இருக்க யானை விரட்டும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள் அதையும் மீறி இவர் உள்ளே சென்று இருக்கிறார். விரிவான விவரங்கள் பின் தெரிய வருகிறது 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad