நீலகிரி மாவட்டம் தாளூரில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்(A++ தரம்) 2/12/2023 அன்று பள்ளிக்கல்வித்துறையுடன் இனைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெருமக்களுக்கான ஒருநாள் ஆசிரியர்கள் மாநாடு நடைப்பெற்றது. இம்மாபெரும் நிகழ்வில் நீலகிரி மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கீதா MA MEd அவர்களும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், சர்வதேச கருத்தாளரும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநருமான உயர்திரு.ரஷித்கசாலி அவர்களும், முனைவரும் சிந்தனை கவிஞருமான உயர்திரு.கவிதாசன்(ரூட்ஸ் இயக்குநர்) அவர்களும்,
அருண்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் உயர்திரு.அருண் அவர்களும் இன்னும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கீதா MA MEd அவர்கள் பேசுகையில் நீலகிரி மாவட்டத்தில் இப்பேர் பட்ட கல்வியில் அதாவது தமிழகத்தில் தலை சிறந்த காலேஜ் இங்கு தான் கண்டேன் .இந்த காலேஜியில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கு கின்றனர் சொல்லபோனா விளையாட்டு. அறிவியல் கண்டு பிடிப்பு .ஒவ்வோரு செயற் பயிற்சி. வெளி மாநிலங்களில் கருத்தரங்கு பங்கேற்பு.
விவசாயத்துறை யில் முன்னேற்றம் .தமிழ் கலச்சாரம் மேன்படுத்துதல் .போன்ற நிகழ்வுகளில் பங்களிப்பு போன்றவற்றில் முன்னேற்றம் இவை அனைத்தும் பார்க்கும் போது ஆசிரியர்களின் பயிற்சி முறை அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றதை பார்க்கும் போது எவ்வளவே மகிழ்ச்சி என்றார் .
இது போன்ற காலேஜிகளுக்கு மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் இது மாணவர்களுக்கு படிப்பு மேன்பட உதவியாக இருக்கும் .என்றார் அரசு நல்ல பல திட்டங்களை வழங்கி வருகிறது படிப்பிற்கு பலவழிகளில் உதவி வருகின்றன.தனியார் பள்ளிக்கு இனையாக அரசு பள்ளிகளும் வளர்ச்சி பெருகிறது இருந்த போதிலும் இது போன்ற கல்லுரிகளின் வளர்ச்சியை மாணவர்களை அழைத்து காண்பிக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்..
மேலும் டாக்டர் முனைவரும் சிந்தனை கவிஞருமான.உயர்திரு.கவிதாசன்(ரூட்ஸ் இயக்குநர்) அவர்கள் பேசுகையில் நீ நினைத்தால் அகிலத்தையும் மாற்ற முடியும் நம் பிரார்த்தனையால் பல்வேறு மாற்றங்கள் கிடைக்கும்.பல்வேறு வழிகளில் மாணவர்களை பற்றி யோசித்து அவர்களை தட்டிக் கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். யாரும் எதற்கும் உதவ மாட்டார்கள் என்று சொல்லி பழகாதீர்கள் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் அவர்களிடத்தில் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் இருக்கக்கூடிய குறைகளை கண்டுபிடித்த அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ..இது போல் நம்மளை முதலில் பாராட்ட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் . உதாரணமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி எரிய தீப்பெட்டி தன் ஒளியை தியாகம் செய்தது இந்த தியாகத்தை நினைத்து மெழுகுவர்த்தி கண்ணீராக உருகியது .இது எப்பேர்ப்பட்ட ஒரு கருத்துப் பாருங்கள் என்றார்..
பள்ளி பருவத்தில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது யாரிடமும் நான் பேசியது கிடையாது என்னை கேலி செய்வார்கள் ஆனால் நான் கல்லூரி படிப்பிற்கு செல்லும் போது தான் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொண்டு அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேசியதால் இன்றுவரை நான் பேச்சு நிறுத்தவில்லை என்னால் இயன்றவரை பலபல்வேறு நபர்களுக்கும் மாணவருக்கும் சரி அறிவுரை வழங்கி வருகிறேன். எனக்கும் லட்சியம் உண்டு பணம் சம்பாதிப்பது இல்லை என்னால் முடிந்த வரை நல்லவர்களை உறுவாக்குவது நல்ல அறிஞர்களை உருவாக்கவது எனது லட்சியம் என்றார் ..
கொரோனா காலகட்டத்தில் கூட மாணவர்கள் படிப்பை மறந்து போயிருப்பார்கள் இன்று முதல் அவர்களுக்கு படிப்பை ஊக்கப்படுத்த அவர்களை கண்டறிந்து அவர்களை தட்டிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு நல்ல அறிவுரை சொல்லி பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் அறிவாலிகளாக மாற்ற அது ஆசிரியர்களுடைய மிக முக்கியமான கடமையாக உள்ளது என்று அவர் கூறினார்..
கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அவர்கள் பேசும் பொழுது கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தரம் வாய்ந்த கல்வியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் வேலைவாய்ப்புகள் குறித்த பயிற்சியும்,வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது எனவும், மேலும் மாணவர்களுக்கு பல இலட்சம் ரூபாயில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதையும் குறிப்பிட்டார்
மேலும் 2023-2024 இல் நீலகிரி கல்லூரியானது கல்வி மற்றும் மேம்பாட்டில் வளர்ச்சியடைந்த ஒரு சிறந்த கல்லூரியாக விளங்கும் என்பதனை தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன் பேசுகையில் focus Nilgiri திட்டத்தின் மூலம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நீலகிரி கல்லூரி பல முயற்சிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2030 இல் இப்பகுதியில் வாழும் மக்களுக்கும் ,மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்
விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்திடவும்
மாணவர்களின் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி குறித்த கருத்துக்களை முன்வைத்து பேசினர். இம்மேன்மை மிகு விழாவில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 1000க்கும் மேற்பட்ட
இருபால் ஆசிரியப் பெருமக்களும்
இவ்விழாவில் பங்குபெற்றனர்.
அனைவருக்கும் புத்துணர்ச்சி மற்றும் உணவு வசதியும் ,
கல்லூரி வரை பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தது. இவ் விழாவில் கல்லூரி நிர்வாகத்தின் உறுப்பினர் திரு. ஆசிம், கல்லூரி மேலாளர் திரு. உம்மர், முன்னாள் முதல்வர் முனைவர்.
எம். தொரை அவர்களும், கல்லூரியின் டீன் முனைவர்.மோகன்பாபு அவர்களும், கல்லுாரியின் உள்ளீட்டு தர அமைப்புக்குழுவின் தலைவர் முனைவர். அலி அவர்களும்,முதுகலை பாடப்பிரிவு மற்றும் ஆராய்ச்சி துறை தலைவர் முனைவர்.முகமது சிராஜூதின் அவர்களும் கல்லூரியின் பேராசிரியர் பெருமக்களும் அலுவலக பணியாளர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment