சென்தாமஸ் பள்ளி வளாகத்தில் வைத்து மூப்பன்ஸ் மெடிக்கல் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பலரும் பயனடைந்துள்ளனர்.
கூடலூர் சென்தாமஸ் பள்ளி வளாகத்தில் வைத்து நீலகிரி மாவட்ட மாணவரணி சார்பில் வயநாடு மூப்பன்ஸ் மெடிக்கல் கல்லூரி சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி ஜிபின் தலைமை ஏற்றார் .நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் .கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன். வயநாடு மூப்பன் மெடிக்கல் கல்லூரி பொது மேலாளர் சூபி கல்லாங்கோடு. தமிழ் நாடு மருத்துவ முகாம் மேலாளர் சுஜித் .உதவி மேலாளர் பினு. மருத்துவர்கள் லோகேஸ். அலுக்கா.செல்ஜோ மற்றும் செவிலியர்கள். மருந்தர்கள்.பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
கூடலூர் மக்களுக்காக தொடர்ந்து மூப்பன் மெடிக்கல் கல்லூரி பல்வேறு பகுதிகளில் இலவச மருத்தும் வழங்கி வருகிறது. இதில் பொது மருத்துவம் ஈசிஜி .ரத்தவகைகள். காது மூக்கு தோன்டை .இதய சிகிச்சை.என பல பிரிவு சிகிச்சையை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கூடலூரில் அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கூடலூர் சுற்று வட்டார பகுதி மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றனர் ....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment