நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டல் குழு ஆலோசனை கூட்டம் புதிய உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா IAS தலைமை தாங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 November 2023

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டல் குழு ஆலோசனை கூட்டம் புதிய உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா IAS தலைமை தாங்கினார்

 


நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டல் குழு ஆலோசனை கூட்டம் புதிய உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா IAS தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ், சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி, ஆவின் மேலாளர் ஜெயராமன், முதன்மை கல்வி அலுவலர் கீதா, நகராட்சி ஆணையாளர்கள் ஏகராஜ் (உதகை & குன்னூர்) பிரான்சிஸ் சேவியர் (கூடலூர் & நெல்லியாளம்) கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திரபூபதி, மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கோத்தகிரி பாலகிருஷ்ணன், சலீம், வாசுதேவன், உதகை அமீர் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 


உணவு பாதுகாப்பு துறையினர் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு காலாவதி உணவு பொருட்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோடின் கலக்காத உப்புக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறமிகள் சேர்க்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். என்றார். 


மாவட்ட ஆட்சியர் அருணா பேசும்போது அனைத்து பகுதிகளிலும் கடைகள் சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தும் குறிப்பாக பள்ளிகள் அருகில் போதை பொருட்கள் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிக்க வேண்டும்.

கலர் பொடிகள் முறையாக பயண்படுத்த படுகிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.  உணவு பொருட்களில் கலாவதி தேதி அச்சிடுவதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அயோடின் கலக்காத உப்புகள் விற்பனையை கண்காணித்து தடுக்க வேண்டும். சாலையோர உணவகங்கள் மற்றும் இதர உணவகங்களில் சுகாதார உணவுகள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் நுகர்வோர்களின் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான சரியான நடவடிக்கை எடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad