அமெரிக்காவில் ஸ்டாம்பர்ட் பல்கலைகழகம் ஆண்டு தோறும்‌ உலகில் தலை சிறந்த 2.சதவீத விஞ்ஞானி பட்டியலை வெளியிடுகிறது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த அத்திக்குன்னா பகுதியை சேர்ந்த அசோக்குமார் அவர்கள் இடம் பிடித்துள்ளார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 November 2023

அமெரிக்காவில் ஸ்டாம்பர்ட் பல்கலைகழகம் ஆண்டு தோறும்‌ உலகில் தலை சிறந்த 2.சதவீத விஞ்ஞானி பட்டியலை வெளியிடுகிறது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த அத்திக்குன்னா பகுதியை சேர்ந்த அசோக்குமார் அவர்கள் இடம் பிடித்துள்ளார்


அமெரிக்காவில் ஸ்டாம்பர்ட்  பல்கலைகழகம் ஆண்டு தோறும்‌  உலகில் தலை சிறந்த  2.சதவீத விஞ்ஞானி பட்டியலை வெளியிடுகிறது.  இதில் தமிழ் நாட்டை சேர்ந்த அத்திக்குன்னா பகுதியை சேர்ந்த அசோக்குமார்  அவர்கள் இடம் பிடித்துள்ளார்



அப்பகுதியியை சார்ந்த மக்கள் அத்திகுன்னா பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி இப்பள்ளியின் முன்னாள் மாணவர் உலக தலைசிறந்த விஞ்ஞானி பட்டியலில் இடம்பெற்ற டாக்டர் அசோக் குமார் அவர்களுக்கு அத்திக்குன்னா கோவில் மட்டத்திலிருந்து சந்தன மாலை பொன்னாடை அணிவித்து மேல தாலத்துடன் ஊர்வலமாக  அழைத்து  செல்லப்பட்டனர் பின்பு ஊர்வலம் முக்கிய வீதி வழியாக அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது.. 



 பின்பு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமையாசிரியர் திருமதி பாப்பாத்தி அவர்கள் வரவேற்று நினைவுரசு வழங்கினார் அதனைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியம்மாள் வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .அதனை தொடர்ந்து கவுன்சிலர் ஆலன் .ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள். பெற்றோர்கள் பொதுமக்கள்  என அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.


விஞ்ஞானி அசோக்குமார் அவர்கள் பேசுகையில்  நான் படிக்கும் நேரத்தில் எந்த வசதியும் இல்லை பத்தாம் வகுப்பு படித்தேன்  என் படிப்புக்கு தலைமை ஆசிரியர் ஊக்குவித்தார் பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்தேன் 12-ம் வகுப்பு அரசு பள்ளியில் தான் படித்தேன் கல்லூரி பயின்றபோது விஞ்ஞானிகளாக வேண்டும் என்று நினைத்தேன் வெறி கொண்டு படித்தேன். அதற்காக விஞ்ஞானிகளைப் பற்றி அதிகமாக படிக்கத் துவங்கினேன். நான் மேல் படிப்பு  கோவை அரசு   கலைக் கல்லூரியில் இளங்கலை உயிர் தொழில் நுட்பம் பட்டமும்.   திருச்சியில் ஜெயின் ஜோசப் கல்லூரியில் முதுகலை உயிர் தொழில் நுட்ப பட்டமும். சேலம் பெரியார் கல்லூரியில் நிரஞ்சன் பட்டமும் சென்னை கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றேன் என்றார்.



 நமது வாழ்க்கையில் மூன்று வாய்ப்புகள்  உண்டு  முதல் வாய்ப்பு நமது படிப்பு தான் என மனதில் வைத்து வைத்து படித்தேன் பின்பு மலேசியாவில் மெக்கானிக் இன்ஜினியராக படிப்பில் தொடர்ந்து மூன்று வருடங்கள் சிங்கப்பூர் பணியாற்றி வந்தேன் 15 நாட்டில் கால் பதித்துள்ளேன் ஏழு நாட்டில் வேலை செய்தேன் பல்வேறு பதவிகளை வகித்தேன். எனக்கு மேரி கியூரி பெல்சர் சீட் எனக்கு பட்டம் வழங்கப்பட்டது .அந்த பட்டமானது சிறந்த விஞ்ஞானிகளுக்கு கொடுக்கக்கூடிய பட்டமாகும்.. நான் 110 இன்டர்நேஷனல் கட்டுரை எழுதி உள்ளேன் உலகத்தில் உள்ள டாப் காலேஜுடன் சந்திப்பு உள்ளது வெளியில் நாடு காலேஜ்களில் மேற்பார்வையாக பனியாற்றியுள்ளேன் .



நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் உள்ளவன் கல்வி நமது ஆயுதம் ஆகும் இதை யாரும் மறந்து விடக்கூடாது என்றும் 85 இன்டர்நேஷனல் கூட்டங்களில் பேசி உள்ளேன் நான் பல முன்னணி காலேஜ்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்துள்ளேன் .இந்தியாவில் உள்ள முக்கிய முன்னணி காலேஜில் கலந்துரையாடி உள்ளேன் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ..ஐ ஏ எஸ் படிக்க ஆசை உள்ள மாணவர்கள் உங்கள் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பயிற்சி கூடங்கள் நடத்தப்படுகின்றன அதில் தாங்கள் கலந்து கொண்டு நன்றாக படித்து முன்னேற வேண்டும் என கூறினார்



நான் படித்த எல்லா கல்லூரிகளும் நான் தான் மாணவர்களின் செயலாளர் .நமது நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற பொலீசன் அதிகமாகி விட்டது காரணம் மக்கள் தொகை பெருக்கம் தொழிற்சாலை வாகன புகை போன்றவையால்  பூமி வெப்பமாகுதல் அதிகமாகி விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மனிதனின் சுய ஒழுக்கம் இல்லாம போனதுக்கு இதற்கு காரணம்..நான்  பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து விமானத்திற்கு எனர்ஜி வழங்குதல் சாக்கடை நீர் உள்ள கபில் கிருமியான  எரிசக்தியாக மாற்றி விமானத்தின் எரிபொருளாக உற்பத்தி செய்து வருகிறோம் 



இப்படி உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்தி பொருள்கள் கப்பல் மற்றும் விமானத்திற்கு எரிபொருளாக தயாரிக்கிறோம். மேலும் மருத்துவத் துறையில் புதுப்புது மருந்துகள் அதாவது கேன்சருக்கு போன்ற மருந்துகளை கண்டுபிடித்து வருகிறோம்.. இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றார்  . 



எங்கள் குழு உயிர் எரிபொருள்கள் துறையில் நிபுணத்துவம் உலகம் வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் காக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் பயோடீசல் பயோ எத்தனை நாள் போன்ற எரிபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் திரவம் திடக்கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரித்தல் மற்றும் அவற்றின் மேலாண்மையில் விரிவாக்க ஆராய்ச்சியை இந்த கழிவு கழிவு பொருட்கள் உயிர் எரிபொருட்கள் மற்றும் பிற உயிர் பொருட்கள் போன்ற மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவே உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் மாணவருக்கு எடுத்துரைத்தார்..



பின்பு அசோக்குமார் பேசுகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தியும் தான் கடந்து வந்த பாதையும் எடுத்துரைத்தார் மாணவர்கள் எதிர்கால வாழ்வுக்கு தேவையான கல்வி ஆலோசனைகளை வழங்குவதாக கூறினார் .இறுதியாக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் கூறினார் நிகழ்ச்சியை ஆங்கில ஆசிரியர் பிரமிளா அவர்கள் வாழ்த்துரை வழங்கி நன்றி கூறினார் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 



No comments:

Post a Comment

Post Top Ad