பந்தலூர் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கையுன்னி அரசு உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2023

பந்தலூர் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கையுன்னி அரசு உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

 


பந்தலூர் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கையுன்னி அரசு உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆல் த சில்ட்ரன் ஏகம் பவுண்டேஷன் ஆகிய சார்பில் கப்ப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு


கப்பாலா சுகாதார நிலையம்

சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் தலைமை தாங்கினார்.


ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்


கப்பாலா அரசு சுகாதார நிலைய ஆயுர்வேத பயிற்சி மருத்துவர் பூஜா பேசும்போது புற்றுநோய் தாக்கம் குறித்து ஆரம்ப கட்டங்களில் கண்டறியும்போது அவற்றை தொடர் மருத்துவம் மூலம் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளது முற்றிய நிலையில் புற்றுநோயை குணப்படுத்த இயலாத சூழல் உருவாகிவிடும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் புகையிலை, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டை  முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இன்றைய விரைவு உணவுகள் அதில் சேர்க்கப்படும் சேர்மங்கள், ரசாயனங்கள் உடலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இது போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சாதாரண கட்டிகள், கொழுப்பு கட்டிகள் உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் வயிற்று பகுதியில் வரும் குடல் புற்றுநோய் என பல்வேறு புற்று நோய்கள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் உணவு பழக்கத்தில் அக்கறையோடு இருக்க வேண்டும் என்றார்.


நெலாக்கோட்டை சுகாதார நிலைய காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் மோனிஷா பேசும்போது 

காற்றின் மூலம் பரவும் காசநோய்  பலருக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக கூடலூர் பகுதியில் காசநோய் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேல் சளி காய்ச்சல் இருப்பின் முறையான பரிசோதனை செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காசநோய் இருப்பின் அரசு மருத்துவமனையில் தரமான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது தொடர் மருத்துவ மூலம் காச நோயை குணப்படுத்த முடியும் என்றார்


நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்


அதுபோல கையுன்னி 

அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரமாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் புற்றுநோய் பாதிப்புகள் குறித்தும், புற்று தாக்காமல் இருக்க எடுத்து கொள் வேண்டிய உணவு முறைகள் குறித்தும்,

 சுகாதார ஆய்வாளர்கள் கணையேந்திரன் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சுகாதார ஆய்வாளர் நிசார் கைகழுவுதல் குறித்தும்

ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மாணவர்களுக்கு மன நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்

 ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் சுய சுகாதார முறைகள்  உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர்.


நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சில்வர்ஸ்டார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad