சேரங்கோடை அடுத்துள்ள அரசு தேயிலைத்தோட்ட கழக குடியிருப்பு பகுதியில் காட்டு யானை வீடுகளை சேதபடுத்தியதால் மக்கள் அச்சத்தில் உரைந்துபோய் உள்ளனர்..
சேரங்கோடு மழவன் சேரம்பாடி சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து யானைகளின் அடகாசம் நாளுக்கு நாள் தொடர்ந்த வன்னமே உள்ளது கடந்த வாரம் படசேரி பகுதியில் யானைகள் வீடுகளை உடைத்ததும் மக்களை அச்சுறுத்தும் வந்தது இதனை தொடர்ந்து சேரங்கோடு பகுதியிலும் யானைகள் சத்துணவு மையத்தை உடைத்து அரிசி தூக்கி எறிந்ததைது இதன் தொடர்ந்து வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்னிலையில் சற்று யானைகளின் தொல்லை ஓய்ந்த நிலையில் மீண்டும் சேரம்பாடி அரசு தேலை தோட்டட கழக ரேஞ்ச் இரண்டு என்று சொல்லக்கூடிய பகுதியில் இரவு காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ பைக் போன்றவை உடைத்து கீழே தள்ளியதும் அதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மக்கள் தங்கள் சமைப்பதற்கு தனியாக செட் அமைத்து இருந்த கூடாரத்தை இடித்து தள்ளியும் துணிமணிகளை தூக்கி வீசும் சென்றுள்ளது..
இதனால் மக்கள் விடிய விடிய யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர் இந்த சம்பவத்தை சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு யானை கண்காணிப்பு குழு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இருந்த போதும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்து வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து இப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களோட வேண்டுகோளாக உள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment