பந்தலூர் தனியார் ரெசார்ட் பகுதியிக்கு நுழைந்த கரடியால் ரெசார்ட் பணியாளர்கள் தலதெரிக்க ஓட்டம் இதனால் அப்பகுதி பரப்பரப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 26 November 2023

பந்தலூர் தனியார் ரெசார்ட் பகுதியிக்கு நுழைந்த கரடியால் ரெசார்ட் பணியாளர்கள் தலதெரிக்க ஓட்டம் இதனால் அப்பகுதி பரப்பரப்பு


பந்தலூர் தனியார் ரெசார்ட் பகுதியிக்கு நுழைந்த கரடியால் ரெசார்ட் பணியாளர்கள் தலதெரிக்க  ஓட்டம் இதனால் அப்பகுதி பரப்பரப்பு...



கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் அதிகளவு காட்டு யானைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண நிலையில் தற்போது கரடிகள் உடைய தொல்லையும் அதிகரித்துள்ளது இதனால் கடந்த மாதம் ஏழமன்னா பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் கரடி முதல் முதலில் ஒரு வீட்டினுள் கதவை உடைத்து சென்று அங்கிருக்க கூடிய எண்ணெய்  உணவு பண்டங்களை சூறையாடி சென்றது அதனைத் தொடர்ந்து பந்தலூர் காலனி.அட்டி போன்ற பகுதியில்  உள்ள குடியிருப்பு பகுதி சென்று அங்கு பூட்டப்பட்ட வீட்டை உடைத்து ஆயில் சர்க்கரை  நெய்போன்ற உள்ளிட்ட உணவு பொருட்களை சூறையாடியது அதனை தொடர்ந்து பந்தலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மளிகைக் கடை கதவை உடைத்து ஆயில் முழுவதையும் குடித்தது ..




இன்னிலையில் ரிச்மன்ட் தனியார் தேயிலை  தோட்ட  இடத்தில் தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்டி னுள் நுழைந்தது  கரடி  உணவை தேடியது அப்போது அங்குள்ள ரிசார்ட் ஊழியர்கள் தலை தெறிக்க ஓடினர்..

 


பின்பு வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பிறகு வனத்துரை கரடியை  இரவு தேடினர்  கரடியின் நடமாட்டம் தெரியாததால் தேடும் பனி நிறுத்தப்பட்டு இன்றைய தினம் பந்தலூர். வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் வன பாதுகாவலர்  சுரேஸ்குமார் பாலகிருஷ்ணன் .வன காப்பாளர் பரமேஸ் போன்றோர்  கரடி நடமாட்டம் உள்ள பகுதியில்  கூண்டு வைக்கும் பனியில் ஈடுபட்டனர் ....

No comments:

Post a Comment

Post Top Ad